வீட்டை விட்டு கிளம்பிய பாரதி.. மீண்டும் வில்லியாக மாறிய வெண்பா.. கடைசியில் எதிர்பாராத கதை முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக பாரதி டெல்லிக்கு கிளம்பி செல்கிறார்.
தன்னுடைய அப்பா யார் என்று உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்த ஹேமாவிடம் வெண்பா கண்ணம்மாவை பற்றி தவறாக பேசியதால் வெண்பாவின் தலையில் கல்லை தூக்கி எறிந்து இருக்கிறார்.

வீட்டை விட்டு கிளம்பிய பாரதி
பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாரதி வேக வேகமாக வீட்டுக்கு வந்து துணிமணிகளை எடுத்துக்கொண்டு டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்டில் குழந்தைகள் எனக்கு பிறந்தது என தெரிய வந்தால் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ வேண்டும். அப்படி டெஸ்ட்டில் வேற மாதிரி ஆனா ரிசல்ட் வந்தால் இங்கிருந்து செல்வதோடு சரி திரும்பி வரக்கூடாது என முடிவெடுத்து விறுவிறுவென கிளம்புகிறார். கீழே அப்பா அம்மா பேசிக் கொண்டிருக்கின்றனர் .அவர்களை கவனிக்காமல் பாரதி வெளியே கிளம்பிக்கொண்டிருக்கும்போது எங்கே பாரதி இவ்வளவு அவசரமாக போகிறாய் என்று சௌந்தர்யா கேட்க ஒரு அவசர மீட்டிங் செல்கிறேன் ஆசீர்வாதம் செய்யுங்கள் என கூறி அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார்.

வீட்டை விட்டு கிளம்பிய ஹேமா
அடுத்த பக்கத்தில் ஹேமா வீட்டில் யோசித்தபடியே இருக்கிறார். லட்சுமி எப்படி அப்பாவை தேடி கண்டுபிடித்தாலோ அதுபோல நாம் தான் இனி கண்டுபிடிக்க வேண்டும் என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கும்போது லட்சுமி டிவியை சவுண்டாக வைக்கிறார். இதனால் இருவரும் சண்டையிடுகின்றனர். அதற்குப் பிறகு லட்சுமி டிவியை பார்த்தபடியே தூங்கி விடுகிறார். அப்போது செய்தி ஒன்றில் ஆசிரமத்தின் கதை ஒன்று சொல்லப்படுகிறது அப்போது ஏற்கனவே ஆசிரமத்திற்கு பாரதியின் அப்பா டொனேஷன் கொடுத்ததை பற்றி பேசியதை ஹேமா நினைத்து பார்க்கிறார் .அதனால் தாம்பரத்தில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்ல முடிவெடுத்து வீட்டை விட்டு கிளம்பி வருகிறார்.

மீண்டும் வில்லியாக வரும் வெண்பா
அடுத்ததாக தெருவில் வெண்பா ரவுடிகளிடம் பணம் கொடுத்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்.ரவுடிகளிடம் பணத்தை கொடுத்து திரும்பிய வெண்பா ரோட்டில் தனியாக ஹேமா நடந்து செல்வதை பார்த்து இவளை எப்படியாவது பாரதி வீட்டில் கொண்டு விட்டு விட்டு நாம் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்று நினைத்து ஹேமாவிடம், ஹேமா ஹேமா என அழைக்க ஹேமா கேட்காமல் நடந்து கொண்டிருக்கிறது. பின்பு பக்கத்தில் சென்று எங்கே செல்கிறார் என கேட்க என்னுடைய அப்பா யார் என்று தேடிப் போகிறேன் என ஹேமா சொல்ல உன்னுடைய அப்பா பாரதி தானே என கேட்க இல்லை கண்ணம்மா தான் என்னுடைய அம்மா ஆனால் நான் எனக்கு அப்பா யார் என்று எனது அம்மா சொல்லவில்லை என்று சொல்ல உங்க அம்மாக்கே அது தெரியாது என்று கண்ணம்மாவை பற்றி தப்பாக பேசுகிறார்.

திருந்தாத வெண்பாவின் புது ப்ளான்
எங்க அம்மாவைப் பற்றி அப்படி பேசாதீர்கள் என்று ஹேமா சொல்ல சொல்ல வெண்பா மீண்டும் மீண்டும் கண்ணமாவை தப்பாக பேசுவதால் அருகில் கிடக்கும் கல்லை எடுத்து வெண்பாவின் தலையில் அடித்து விடுகிறார். இதனால் ரவுடிகளிடம் ஹேமாவின் புகைப்படத்தை கொடுத்து அவளை உடனடியாக தூக்கிட்டு வாங்க என ஆர்டர் போட ரௌடிகள் ஹேமாவை கடத்த கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. அடுத்ததாக பாரதியின் ரிசல்ட் பாசிட்டிவ் என வந்து இரு குழந்தைகளும் பாரதியின் குழந்தைகள் என்பது தெரிய வர இருக்கிறது. இந்த நிலையில் ஹேமாவை கடத்தி வைத்துக்கொண்டு வெண்பா பாரதியை மிரட்ட இருக்கிறாராம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications