வெண்பாவிற்கு திருமணம்! பாரதிக்கு குடும்பத்தினர் கொடுத்த தண்டனை..இந்த மாதிரி முடிவை எதிர்பார்க்கலையே!
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் செயலை கண்டு ஹேமா மற்றும் லட்சுமி அவரை வெறுத்து ஒதுக்கி விட்டனர்.
பாரதியின் குடும்பத்தினர் கடைசியில் எடுத்த முடிவால் பாரதி கதி கலங்கி போயிருக்கிறார்.
இந்த பிரச்சனையிலும் வெண்பாவை, தான் திருமணம் செய்து கொள்ள தயார் என்று ரோஹித் முடிவெடுத்த நிலையில் அவருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் வெண்பா.

நன்றி மறக்கலாமா பாரதி
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் சௌந்தர்யா பாரதியை திட்டிக் கொண்டிருக்கிறார். அன்னைக்கு ஹாஸ்பிடலில் தீவிரவாதிகளால் பாம் கட்டி தொங்கவிட்டபோது கண்ணம்மா அவளுடைய உயிரை பணையம் வைத்து உன்னை காப்பாற்றினாள். பழையதை மறந்து விட்டு அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என எல்லோரும் கெஞ்சியும் நீ முடியாது என்று சொல்லிட்ட ,அங்கு இருந்த காவல் துணையினர் கூட உன்னிடம் இதைத்தான் கேட்டுக் கொண்டனர். ஆனால் இப்போ வெண்பா கலுத்தில் தாலி கட்ட வந்திருக்க, இதுக்கு பேரு என்ன? என சௌந்தர்யா கேட்கிறார் அதற்கு பாரதி பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.

வெறுத்துப் போய் பேசிய தம்பிவெறுத்துப் போய் பேசிய தம்பி
அப்போது அகிலன் நான் உன்னை எப்படி எல்லாம் நினைத்திருந்தேன். அண்ணிக்கும் உனக்கும் மனக்கசப்பு ஆனால் சரியாகிவிடும் என்று நினைத்திருந்தேன் ஆனால் நீ அண்ணிக்கு இப்படி ஒரு துரோகத்தை எதிர்ப்பு செய்வாய் என்று எதிர்பார்க்கவே இல்லை. உன்னை அண்ணன் என்று சொல்வதற்கே எனக்கு கேவலமாக இருக்கிறது. எனக்கு இனி நீ அண்ணனே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது லட்சுமி, ஹேமா அழைத்துக் கொண்டு அஞ்சலி வருகிறார் .

குழந்தைகளின் கண்ணீர் வார்த்தை
ஹேமா உங்களைப் பார்த்தாலே புடிக்கல ஐ ஹேட் யூ என கூறுகிறார். நீங்க என்கிட்ட பொய் சொல்ல மாட்டேன் என்று சொன்னீங்க இல்ல டாடி ?இப்போ மறுபடியும் நீங்க என்கிட்ட பொய் சொல்லிக்கிட்டே இருக்கீங்க ? இந்த வெண்பா ஆன்ட்டி தான் நீங்க கல்யாணம் செய்ய போறீங்க என்பதை எங்க கிட்ட நீங்க மறைச்சிட்டீங்க ?உங்களை எனக்கு பிடிக்கல என்று கூறுகிறார். அடுத்ததாக லட்சுமி எனக்கு எங்க அம்மாவை அடுத்ததாக டாக்டர் அப்பாவை தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்போ உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை .நீங்க எங்களை ஏமாத்திட்டீங்க என்று லட்சுமி ஹேமா இருவரும் கண்ணம்மாவின் கையைப் பிடித்து இங்க இருந்து கூட்டிவிட்டு போயிருங்க என்று அழைக்கின்றனர்.

தனி மரமான பாரதி
பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் இனி எங்கள் முகத்தில் முழிக்காதே என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்த கிளம்பும் பாரதியிடம் வெண்பா வந்து பேச தொடங்குகிறார். இனி என் முகத்திலேயே முழிக்காத ,உன்னால தான் நான் நடுத்தெருவில் நிற்கிறேன் என்று கோபப்பட்டு திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியே ஓடி வருகிறார். அங்கே ஹேமா, லட்சுமி எல்லோரும் காரில் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்து அழுதபடி நிற்கிறார். அதே நேரத்தில் இனிமேல் உன்னை யாரு கட்டிக்கவா என்று சர்மிளா வெண்பாவிடம் அழுது கொண்டிருக்கிறார் அதற்கு நான் இருக்கிறேன் என ரோகித் சொல்கிறார்.

மீண்டும் திருமணத்தை நிறுத்திய வெண்பா
என்னோட குழந்தை வெண்பாவின் வயிற்றில் வளர்கிறது. அது மட்டும் இல்லாமல் நான் வெண்பா மேல உயிரையே வச்சிருக்கேன். அதனால நான் வெண்பாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஐயரிடம் தாலியை கொண்டு வரச் சொல்கிறார். ரோஹித்தின் அம்மா அவ உன்னை ஏமாத்திட்டு போனவ, அவ வேண்டாம் என்று அழுகிறார். ஒரு வழியாக ரோஹித் அவருடைய அம்மாவை சமாதானம் செய்து வைக்கிறார். கடைசியில் தாலி கட்ட போகும்போது ஸ்டாப்பிட் ரோகித் என வெண்பா நிறுத்துகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துவிட்டது. இந்த ஒரு முடிவை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கடைசி நேரத்தில் வெண்பாவின் திருமணம் நடந்து விட்டால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications