பிக்பாஸ் 2: ஞாயிறு இரவு 7 மணி முதல் ஒளிபரப்பு.. தொடங்கியது கவுண்ட டவுன்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 2விற்கான கவுண்ட் டவுனை விஜய் டிவி தொடங்கியுள்ளது. வரும் ஞாயிறு இரவு முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, நாளை மறுதினம் முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

வரும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது பிக்பாஸ் சீசன் 2வின் முதல் எபிசோட். அதனைத் தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 8.30 மணிக்கும் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும்.
இதற்கான கவுண்ட் டவுனை விஜய் டிவி இன்று முதலே ஆரம்பித்து விட்டது. விஜய் டிவி லோகோவிற்கு நேர் எதிராக வலப்புறத்தில் இந்த கவுண்ட் டவுன் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்தில் வருவது போன்றே, இதிலும் அவ்வப்போது கமல் தோன்றுகிறார். முதல் எபிசோட் ஒளிபரப்பு வரை இந்த கவுண்ட் டவுன் தொடரும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே விளம்பரங்களிலும் கமல் பிக்பாஸ் கவுண்ட் டவுன் சொல்லி வருகிறார். ஆனால், அது நாள் கணக்கில் உள்ளது. இந்நிலையில், விஜய் டிவியில் தற்போது வரும் கவுண்ட் டவுன் நிமிடக்கணக்கில் வருகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!