காதை கிழிக்கும் அளவிற்கு அலறல் போட்ட பிரியங்கா..காரணம் இதுதானா??
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா அலறல் சத்தத்தில் ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள் .
ஒருவழியாக ரசிகர்கள் எதிர்பார்த்து நடந்துவிட்டது என்று தற்போது ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் ப்ரமோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கின்ற நிலையில் மீதமிருக்கும் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இந்த வீட்டிற்குள் அலப்பரை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களை பார்க்கும் போது போர் அடிக்கிறது என்று நேற்று எபிசோடு பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டியிருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக வரும் போட்டியாளர்கள்
பொதுவாக கடைசி வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வது வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம் தான். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தான் பலர் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அது நிகழ்ந்துவிட்டது என்று தெரிந்ததும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. இன்றைய நிகழ்ச்சி களை கட்ட போகிறது என்று பலர் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.

பிரியங்காவின் அலறல் சத்தம்
முதலாவது வாரம் முதல், ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் 2 பேர் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இருக்கின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் செம மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். அதிலும் பிரியங்காவை சொல்லவே வேண்டாம். எப்போதுமே அலப்பறை செய்யும் இவர் தற்போது கொஞ்சம் அதிகமாகவே செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு அவருடைய மகிழ்ச்சியை அலறலில் வெளிக்காட்டி இருக்கிறார்.
Recommended Video

போட்டியாளர்கள் மீண்டும் வருகை
இன்றைய எபிசோடில் எப்படியும் யாரேனும் வருவார்கள் என்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஐந்து போட்டியாளர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர். அப்படிதான் இன்று பாட்டு சத்தம் கேட்டதும் ஆட்டம் போட்டபடியே யாரோ வருகிறார்கள் என்று போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போது, அங்கே நாடியா சிங், சுருதி இருவரும் அசத்தலான கெட்டப்பில் உள்ளே நுழைகின்றனர் அவர்களை வரவேற்ற சக போட்டியாளர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருக்கிறது. எப்படியும் இன்று என்டர்டைன்மென்ட் இருக்கிறது என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications