தாமரை கெட்டவார்த்தை பேசிவிட்டார்..பாவனியின் அடுத்த குற்றச்சாட்டு...இந்த சண்டை முடியாதா??
சென்னை: நாட்டின் பெரிய சண்டைகள் தீர்ந்தால் கூட தாமரை மற்றும் பாவனியின் சண்டை தீராதா?? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்து ரசிகர்கள் இனி பிரச்சனை இல்லை என்று நினைத்த கொஞ்ச நேரத்திற்குள் நாங்கள் அப்படி எல்லாம் இல்லை என்று நிரூபித்து விட்டார்கள்.
அதுவும் பாவனி செய்யும் செயல் அவருடைய ரசிகர்களை எரிச்சலடைய வைத்து வருகிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

தீராத பிரச்சனை
போன வாரம் தான் பாவனியும், தாமரையும் பேசி விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில் உடனே இப்படி முட்டல், மோதல்களை தொடங்கிவிட்டார்கள் என்று கலாய்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒன்றாக சுற்றிக்கொண்டிருந்த இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்புகள் தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

டாஸ்க்கால் வந்த பிரச்சனை
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத பிக்பாஸ் அவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்துவதற்காக காயின் டாஸ்க் வைத்து பிரச்சனையை கொளுத்தி போட்டுவிட்டது. இதில் பாவனி மற்றும் தாமரையின் நட்பு, பாசம் எல்லாம் கொழுந்து விட்டு எரிந்தது போய்விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் தாமரையும் பாவனியும் ஒரே வயதை ஒத்தவர்கள் ஆக இருப்பதால் இவர்களுக்குள் அன்பு, பாசம் எல்லாம் பெருக்கெடுத்து தான் ஆரம்பத்தில் ஓடியது. அது இப்போது எங்கே போச்சு என்று பலர் தேடி வருகிறார்கள்.

ஜாலியாக பேசினார்களே
இரண்டு வாரங்களுக்கு முன்பு காயின் டாஸ்கில் தாமரை மற்றும் பாவனி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதற்கு பிறகு இவர்கள் இருவரும் பேசுவார்களா இல்லையா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி அன்று தாமரையின் ஃபேமிலி போட்டோவை பார்த்ததும் பாவனி பழைய பகையை மறந்த தாமரை உன் புருஷன் அழகாக இருக்கிறார் என்றும் உன் பையன் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்றும் பாவனி தாமரையிடம் வெளிப்படையாக பேசியிருந்தார். அதற்கு பிறகு அப்போ பிரச்சினை எல்லாம் முடிஞ்சு போச்சு இனி இவர்கள் ஒன்றாக மாறிவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோடு கொஞ்சம் அதிர்ச்சிதான் கொடுத்திருக்கிறது.

பாவனி சொன்ன வார்த்தை
கமல் முன்னிலையில் இந்த வார பிரச்சனைக்கு பஞ்சாயத்து நடத்திய பிறகும் தாமரையும், பாவனியும் சமாதானமாவதாக இல்லை. என்னதான் இவர்கள் இருவரும் கமல் முன்னிலையில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் சக போட்டியாளர்கள் மத்தியில் இவர்கள் பேசியது அனைவரையும் குழப்பமடைய செய்திருக்கிறது. அதுவும் தாமரை கெட்ட வார்த்தை பேசினார் என்று பாவனி சொன்னதை கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏன் தான் இந்த பாவனி இப்படி மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று பலர் குழம்பிக் கொண்டிருக்கும் போது, பாவனி உண்மையிலேயே இப்படி தானா இல்ல நடப்பதையெல்லாம் மறந்து விடுகிறாரா என்று பலர் கூறி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications