படிக்கவில்லை என விட்டு சென்ற மனைவி! நான் இறந்த பிறகாவது என் குழந்தையிடம்.. கதறி அழுத ராபர்ட் மாஸ்டர்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய மனைவி குழந்தையை நினைத்து கதறி அழுது இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வருவதற்கான உண்மை காரணம் என்ன என்பதை கதை சொல்லும் டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார்.
தன்னுடைய மகளுக்கு தான்தான் அப்பா என்பதே தெரியாது என்று உருக்கமாக அவர் பேசி அழுது இருக்கிறார்.

தந்தையின் விடாமுயற்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தன்னுடைய கதையை கூறியிருக்கிறார் .அதில் சிறுவயதிலே ராபர்ட் மாஸ்டருக்கு போலியோ அட்டாக் ஆகிவிட்டதாம். அதனால் அவர் நடக்க முடியாமல் தான் இருந்திருக்கிறார் பிறகு அவருடைய தந்தையின் கடினமான முயற்சியால்தான் அவர் நடந்து இருக்கிறார். நடக்க தொடங்கிய பிறகு பல கஷ்டங்களை தாண்டித்தான் ஒரு டான்ஸ் மாஸ்டர் ஆகும் அளவிற்கு இவர் வளர்ச்சி அடைந்திருக்கிறாராம்.

காதலும் பிரிவும்
டான்ஸ் மாஸ்டராக இருக்கும்போது இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்ததாம். ஆனால் அந்தப் பெண்ணின் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். அந்த பெண் இவர் படிக்கவில்லை என்ற காரணத்தால் திருமணத்திற்கு பிறகு இவரை வீட்டு விலகி சென்று விட்டாராம். அப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்ததாம். அந்த குழந்தை ராபர்ட் மாஸ்டர் இரண்டு வயது வரைக்கும் தான் பார்த்து இருந்திருக்கிறதாம்.

வலியை கொடுத்த வார்த்தை
ராபர்ட் மாஸ்டரை விட்டு அவருடைய மனைவி விலகி சென்ற பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறாராம். ராபர்ட் மாஸ்டரின் குழந்தை அவருடைய அம்மாவிடம் தான் வளர்ந்து வருகிறதாம். ராபர்ட் மாஸ்டர் தான் அவருக்கு அப்பா என்பது கூட அவருக்கு தெரியாதாம். குழந்தைக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஒரு முறை அவருடைய அம்மாவோடு வண்டியில் பார்த்திருக்கிறார் .அப்போது அந்த குழந்தையின் அம்மா ராபர்ட் மாஸ்டரை பார்த்து அங்கிளுக்கு ஒரு ஹாய் சொல்லு என்று சொல்லி இருக்கிறார். அவருடைய மகளும் , பாய் அங்கிள் என்று கூறி விட்டுப் போனாராம். இதெல்லாம் தனக்கு மிகப்பெரிய வலியாக இருக்கிறது என்று சொல்லி ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கியபடி கதறி அழுதுவிட்டார்.

பிக் பாஸ் வந்த காரணம்
நான் இறந்த பிறகாவது என்னுடைய மகளுக்கு நான் தான் அப்பா என்று சொல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். அதோடு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த காரணமே இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்பாவது இவர்தான் என்னுடைய அப்பா என்பதை என் மகள் தெரிந்து கொள்வார். அதற்காகத்தான் இந்த ஷோவுக்கு வந்தேன் என்று கண்ணீர் மல்க ராபர்ட் மாஸ்டர் பேசி இருக்கிறார். ராபர்ட் மாஸ்டரின் மனைவி இவரை விட்டு விலகி சென்ற பிறகுதான் இவருக்கும் வனிதாவிற்கும் சில காலமாக காதல் இருந்தது. இவர்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர் .பின்பு இருவரும் ஒரு சில காரணங்களால் பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய முதல் மனைவி மற்றும் குழந்தையை குறித்து கண் கலங்க பேசி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications