பொருட்களை உடைத்த போட்டியாளர்கள்..உறுதியாக வெளியேற கோரிக்கை வைத்த ஜிபி முத்து.. நாளை வெளியேற்றம்..!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்று விடுவதாக தொடர்ந்து பிக் பாஸ் இடம் கோரிக்கை வைத்து வருகிறார்.

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் பொருட்களை உடைத்து சேதப்படுத்திய நிலையில் கண் கலங்கியபடி தனியாக அமர்ந்திருந்த ஜி.பி முத்து மீண்டும் தன்னுடைய தம்பியை வரச் சொல்லி அவரோடு சென்று விடுவதாக கூறியிருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த சீசன்

ரசிகர்களை கவர்ந்த சீசன்

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி அறிமுகமானார். எந்த சீசனிலும் இல்லாத அளவில் முதல் வாரத்தில் இருந்து உள்ளே இருக்கும் ஒரு போட்டியாளருக்கு ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. அது ஜிபி முத்து தான் என்று யாரை கேட்டாலும் சொல்வார்கள். அந்த அளவிற்கு ஜி பி முத்துவிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.

குழந்தைத்தனமான அழுகை

குழந்தைத்தனமான அழுகை

இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருக்கும் நிலையில் தன்னுடைய வீட்டின் ஞாபகம் அதிகமாக இருக்கிறது என்றும் தன்னுடைய மகனுக்கு உடல்நிலை ஏற்கனவே சரியில்லாமல் இருந்தது. அவர் என்னை அதிகமாக தேடுவான் அதனால் நான் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று குழந்தையைப் போல ஒரு சில நாட்களாகவே ஜி பி முத்து அழுது கொண்டிருக்கிறார். ஜி பி முத்து பிக்பாஸிடமும் அடிக்கடி என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.

பொருட்களை உடைத்த போட்டியாளர்கள்

பொருட்களை உடைத்த போட்டியாளர்கள்

இன்றைய நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி மாஸ்டர் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் டான்ஸ் மராத்தானில் டான்ஸ் ஆடி முடித்திருந்தனர். இவர்கள் அனைவரும் இந்த மராத்தானை முடித்துவிட்ட காரணத்தினால் பிக் பாஸ் அவர்களுக்கு ஒரு பாடல் போட்டு ஆட வைத்திருந்தது. சுத்தம் என்பது நமக்கு எனும் பாடலுக்கு அனைவரும் ஆட்டம் போட்டிருந்தனர். அப்போது அசல் கோளாறு, தனலட்சுமி, கதிரவன் என ஒரு சிலர் டைனிங் டேபிளில் ஏறி டான்ஸ் ஆடி ஏதாவது டைனிங் டேபிள் உடைந்து விட்டது. அதனால் காண்டான ஜி பி முத்து கேமரா முன்பு போய் பேசிக் கொண்டிருந்தார்.

ஜி.பி முத்துவின் கோரிக்கை

ஜி.பி முத்துவின் கோரிக்கை

அவர் என்ன பேசினார் என்ற சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தது தான் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு பிறகு பிக் பாஸ் அவரை கன்ஸ்க்ஷன் ரூம்க்கு தனியாக அழைத்தது. அங்கே நீங்கள் வீட்டிற்கு செல்லும் முடிவில் உறுதியாக தான் இருக்கிறீர்களா? என்று பிக் பாஸ் கேட்டார். அதற்கு ஜிபி முத்து ஆமாம் என்னால் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. என் தம்பியை வர சொல்லுங்கள் நான் அவரோடு சென்று விடுகிறேன். நீங்க என்ன வேலை சொன்னாலும் அதை செய்து முடித்துவிட்டு நான் சென்று விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

நாளை வெளியேற்றம்

நாளை வெளியேற்றம்

ஜி பி முத்துவின் பதிலை கேட்டு ஒரு சில நிமிடங்கள் பிக் பாஸ் யோசித்து விட்டு நீங்கள் வீட்டை விட்டு எப்படி பாதியிலேயே கிளம்பினால், இது விதிமீறல் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கிறார். அதற்கு ஜிபி முத்து எல்லாம் சரிதான் ஆனால் இங்கே இருந்தால் எனக்கு ஏதாவது ஆகிவிடும். எனக்கு வீட்டு நினைப்பாகவே இருக்கிறது. நான் வீட்டுக்கு சென்றே ஆக வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு பிக் பாஸ் உங்கள் தம்பியிடம் பேசிவிட்டு உங்களிடம் பேசுகிறோம் என்று அனுப்பி வைத்திருக்கிறார். வெளியே வந்த ஜிபி முத்து சக போட்டியாளர்களிடம் இரண்டு நாட்களில் நாளை அல்லது நாளை மறுநாள் என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று கூறி இருக்கிறார். இதனால் இந்த வாரம் ஜிபி முத்து வெளியேற போவது உண்மைதான் என்று தோன்றுகிறது. ஆனால் ஜி பி முத்துவின் தம்பி என்ன பதில் சொல்கிறார்? அதைப் பொறுத்து பிக் பாஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+