கடைசி டாஸ்க்.. டிக்கெட்டை தட்டி தூக்கிய போட்டியாளர்..இவருக்காகத்தான் இந்த ஏற்பாடா??
சென்னை: இந்த வாரம் முழுக்க நடைபெற்ற டிக்கெட் டு ஃ பினாலே டாஸ்க் வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வெற்றிபெற்ற போட்டியாளருக்காக தான் ஆரம்பத்திலிருந்து போட்டிகள் பிஸிக்கலாக இல்லாமல் இருந்ததா??என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தொடரும் போட்டிகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டிகளுக்கான டிக்கெட் வைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை பெறுவதற்காக போட்டியாளர்களுக்கு 5 டாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதற்கு பிறகு இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகம் ஆகியிருந்த நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே மிச்சம் இருக்கின்றனர். மீதமுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வீதம் வெளியேறி இருந்தனர். ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

நிரூப்பின் செயல்பாடு
தற்போது இருக்கும் 8 போட்டியாளர்களில் யார் இந்த டிக்கெட்டை வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு போவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருந்தது. ஆனால் முதல்நாள் டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களும் ஒன்றுகூடி நிரூப்பை வெளியேற்றி விட்டனர். தற்போது வரைக்கும் இந்த விளையாட்டை விளையாட முடியாத கோபத்தையும், ஏக்கத்தையும் பல இடங்களில் நிரூப் வெளிக்காட்டி கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் அந்த டிக்கெட்டின் மீது தனக்கு இருக்கும் ஆசையை அவருடைய பார்வையாலே ரசிகர்களுக்கு வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அமீருக்காகதான் சலுகைகளா??
அடுத்த நாள்தான் டாஸ்கில் தாமரை மற்றும் பாவனி வெளியேற்றப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து ராஜு மற்றும் பிரியங்கா வெளியேறி இருந்தனர். இந்த நிலையில் நேற்றைய டாஸ்க்கில் சஞ்சீவ், சிபி, அமீர் மூவரும் கலந்து கொண்டனர். இதில் சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிபி மற்றும் அமீர் கடைசி டாஸ்க்கில் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கின்றது. ஏற்கனவே அமீருக்கு காலில் அடிபட்டு இருப்பதால் அவரால் விளையாட முடியுமா??என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த டிக்கெட்டை பெறுவதற்கான டாஸ்க்குகள் எல்லாமே எளிமையான முறையில் வாயில் வடை சுடுவது போன்று இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

டிக்கெட்டை தூக்கிய அமீர்
தற்போது இன்றைய எபிசோடுகளில் அமீர் தான் ஜெயித்து டிக்கெட்டை வென்றிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அப்போது அமீருக்காக தான் பிக்பாஸ் எளிமையான டாஸ்க்குகளை வைத்திருந்ததா??அப்போ அமீரை ஜெயக்க வைப்பதற்காக பிக்பாஸ் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறதா??என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். எப்படியோ நேரடியாக அமீர் பைனலுக்கு சென்றுவிடுகிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார் என்றுதான் தெரியவில்லை என்று பலர் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications