வேலை செய்றவங்க கடைசிவரைக்கும் வேலைதான் செய்யனுமா..தாமரையின் கேள்வி... இதுக்கு யார் காரணம்??
சென்னை: தலைவர் பதவி இல்லை என்றாலும் வீட்டில் அனைவரும் சமமாக வேலையை செய்ய வேண்டும் என்று கருத்துக்களை கூறியிருக்கிறார் தாமரைச்செல்வி.
தாமரையின் செல்வியின் கருத்தை கேட்ட ரசிகர்கள் போட்டியாளர்கள் இப்படி மாறியதற்கு யார் காரணம் என்று எதில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இது பெரிய செயல்தான்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் கிராமத்து பின்னணியில் இருந்து ஒரு போட்டியாளராக வந்திருக்கும் தாமரைச்செல்வி இவ்வளவு நாட்களாக இந்த வீட்டிற்குள் இருந்து கொண்டு இருப்பது அவருடைய வெற்றிதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். யாருக்கும் பணிந்து போகாத இவருடைய கேரக்டர் ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருக்கிறது. எதற்கும் துணிந்து அடுத்தவர்களிடம் இவர் பேசும் பேச்சுகள் வேற லெவல் தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். எவ்வளவோ பெரிய பின்னணியிலிருந்து வந்தவர்கள் கூட இந்த வீட்டை விட்டு பாதியில் வெளியேறி இருந்தாலும், எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் இவர் இவ்வளவு நாட்கள் இருப்பது ரசிகர்கள் இவருக்கு கொடுத்த பரிசு என்று கூறிவருகின்றனர்.

தரமான அட்வைஸ்
தாமரைச்செல்வி தான் இந்த வீட்டில் தலைவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனக்குரிய வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று எப்போதும் வேலைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டு இருக்கிறார். அதனால் தான் தற்போது இந்த வாரம் தலைவர் பதவி இல்லாததால் யாருக்கு எந்த பொறுப்பு என்று கொடுக்கவில்லை. அதனால் ஒரு சில போட்டியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்து வருகிறார்களாம். அதனால் தாமரை செல்வி இப்படி எல்லாம் இருக்கக் கூடாது நம்முடைய வேலையை நாம் தான் செய்யவேண்டும் என்று அறிவுரை கூறி வருகிறார்.

ரசிகர்களின் கேள்விகள்
தாமரைச் செல்வியின் கருத்தை கேட்ட ரசிகர்கள் கருத்து என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பாதி பேர் இப்படி மாறுவதற்கு காரணம் செல்வி தான் என்று அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து ராஜு, சிபி என ஒவ்வொருவருக்கும் அவர்களின் வேலையை ஓடி ஓடி சென்று தாமரைச்செல்வி செய்ததால்தான் அவர்கள் சோம்பேறியாக மாறிவிட்டார்கள் என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தாமரைச்செல்வி கருத்து சொல்லிக் கொண்டிருக்கும் போது பிரியங்கா அவருக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருக்கிறார். அதனால் அவரையும் விடாத ரசிகர்கள் முதலில் சமையல் நன்றாக கற்றுக் கொண்டு அதற்குப் பிறகு அட்வைஸ் செய்ய வேண்டும் என்று அவருக்கும் அட்வைஸ் பறந்து வருகிறது.
Recommended Video

அப்போ அப்படி பேசியது யார்??
ஒரு சில போட்டியாளர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தன் முன்னால் நிற்பது தமக்கு சமமானவர்கள் தான் என்று யாருக்கும் பயப்படாமல் தான் தாமரைச்செல்வி நடந்து கொண்டு வருகிறார் என்று அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். அதுமட்டும்மில்லை இதே தாமரைதான் நான்கு வாரங்களுக்கு முன்பு ராஜு எல்லா வேலையும் செய்வாங்க என்று கமல் முன்பு சர்டிபிகேட் கொடுத்து பிரியங்காவின் மூக்கை உடைக்க வக்காலத்து வாங்கினார். அதுக்குள்ள பிக் பாஸ் வீட்டுக்குள்ள தட்பவெப்ப நிலை மாறிடிச்சா என்றும் கேட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications