இன்னும் ஒரு வாரம் தான்...என்ன ஆச்சரியம் நடைபெற போகிறதோ?? கமலின் உள்குத்து பேச்சு
சென்னை: ப்ரமோ எப்போது வரும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கமல் உள்குத்து பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாரம் எலிமினேஷனில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் முடிவில் தடுமாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. பல சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தான் ஒவ்வொரு வருடமும் அதில் புதிய சீசன் களை தொடங்கி வருகின்றனர். தற்போது ஐந்தாவது சீசனில் கலக்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் முடிவடைய இன்னும் ஒரு வார காலமே உள்ளது. இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். தற்போது 6 போட்டியாளர்கள் மீதம் இருக்கின்றனர். இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தாலும் ஆரம்பத்திலிருந்து ராஜூ தான் ஜெயிப்பர் என்று அடித்துக் கூறிய ரசிகர்கள் தற்போது அந்த முடிவில் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்து உள்ளனர்.

ரசிகர்களின் சலிப்பு
எனவே ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி எலிமினேஷன்கள் அமையவில்லை என்று பலர் குற்றம் சாட்டி கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீசனும் அதில் தப்பவில்லை. ஒரு சில வாரங்களில் இவர்தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் போட்டியாளர்கள் பலர் ஓட்டு போட்டு பாதுகாத்தவர்கள் வெளியேறி வருகின்றனர். என்னதான் ரசிகர்கள் ஓட்டு போட்டாலும் இருந்தாலும் அதில் மாற்றங்கள் ஏற்படுவது ரசிகர்களுக்கு சலிப்பாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

எதிர்பார்க்காத நிகழ்வுகள்
இதற்கு முன்பு இமான் அண்ணாச்சி, அக்ஷரா, வருண்,சஞ்சீவ் என பலர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அது போல சிபி பணப்பெட்டியை தூக்கி கொண்டு சென்றது யாரும் எதிர்பார்க்காததாக இருந்தாலும் இது ஒரு நல்ல முடிவு என்று ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் கடைசி போட்டிக்கு செல்லும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில் பிக்பாஸ் செயல்பாடு பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதலாவதாக சேவ் ஆன அமீர் பல போட்டிகளில் வெற்றி பெற்று இந்த இடத்திற்கு வந்தாலும், இரண்டாவதாக தேர்ந்தெடுக்க போட்டியாளராக நிரூப் வந்தது பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறிவருகின்றனர்.

என்னதான் நடக்கும்
இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரம் தான் இருக்கும் நிலையில் இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ராஜு தான் டைட்டில் ஜெயிப்பாரா??அல்லது பிரியங்கா, அமீர்,நிரூப்,பாவனிக்கு பிக்பாஸ் சாதகமாக செயல்பட்டு விடுமா ??என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் என்னவேணாலும் நடைபெறலாம் என்று கமல் குறிப்பிட்டதுபோல, ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியை பற்றி கலாய்த்து வருகின்றனர். ரசிகர்கள் என்னதான் ஓட்டு போட்டாலும், தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை பாதுகாத்தலும் கடைசியில் பிக் பாஸுக்கு பிடித்தவர்கள் தான் ஜெயிக்க போகிறார்கள் என்று தான் பலர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications