பிக் பாஸ் அபிஷேக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர்க்கும் கருத்து மோதல்... இது என்ன புது கதை..!!
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் தற்போது பட்டிமன்ற பேச்சாளராக கலந்து கொள்ள இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
ரவீந்திரனோடு போட்டி போடும் போட்டியாளர் பிக் பாஸ் புகழ் அபிஷேக் என்று கூடுதல் தகவலை தெரிவித்து இருக்கிறார்.
சும்மாவே இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள் இப்போது போட்டி என்று வந்துவிட்டால் எப்படி எல்லாம் பேசப் போகிறார்களோ தெரியவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

சினிமா பையன் அபிஷேக்
சினிமா பையன் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட அபிஷேக் ராஜா பல திரைப்படங்களை பற்றி ரிவ்யூ கொடுத்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக பலருக்கும் பரீட்சையமாக இருந்து வருகிறார். அபிஷேக் ராஜா என்று சொன்னாலுமே பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் அவருடைய உண்மையான முகத்தை உலகிற்கு காட்டியது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய அல்டிமேட் பெர்ஃபார்மன்ஸ் பலரையும் கவர்ந்திருந்தது சிலரை வெறுப்படையவும் செய்திருந்தது.

பிக் பாஸ் ரிவ்யூ
தயாரிப்பாளராக பல திரைப்படங்களை தயாரித்து இருந்தாலும் ரவீந்திருக்கு பெயர் வாங்கி கொடுத்தது எல்லாமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரிவ்யூ தான் என்று பலருக்கும் தெரியும்.பிக் பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. பலர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வேற லெவலில் வளர்ச்சி அடைந்து விட்டனர். அந்த வகையில் ரவீந்தரும் ஒருவர். அவர் தயாரித்த திரைப்படங்கள் கூட இவருக்கு இந்த அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை ஆனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ரிவ்யூ செய்வதை பார்ப்பதற்காக இவருடைய யூடியூப் சேனல்களை பலர் பாலோ செய்து வருகின்றனர்.

பிரபலமாக வைத்த திருமணம்
தற்போது சில வாரங்களுக்கு முன்பு திடீர் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் பாப்புலர் ஆகிவிட்டார். அதுவரைக்கும் தெரியாமல் இருந்த ரசிகர்கள் கூட இவரை அதிகமாக தேடிப் பார்த்துக்கொள்ள இவரும் தற்போது பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டார். இதற்கு முன்பு இவருக்கு இருந்ததை விடவும் இவருடைய திருமணத்திற்கு பிறகு அதிகமான பாலோவர்ஸ் இருக்கு கிடைத்திருப்பதாக இவரே கூறி இருக்கிறார். இந்த நிலைமையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் தான் அபிஷேக் ராஜாவோடு பட்டிமன்றத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

தொடங்கும் கருத்து மோதல்
அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவரைப் பற்றி பல்வேறு தகவல்களையும் கூறி கலாய்த்து வந்த ரவீந்தர் அவரோடு நேருக்கு நேர் பட்டிமன்றத்தில் பேச இருப்பதை பார்க்கும்போது இது வேற லெவலில் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் பட்டிமன்றத்திற்கு தலைப்பு என்னவென்றால் இளைஞர்களின் வழி, இதய வலியே.!!என்று ரவீந்தர் பேச இருக்கிறாராம். அதுவெல்லாம் இல்லை இணைய வழி தான் என்று அபிஷேக் ராஜா இவரை மறுத்து பேச இருக்கிறாராம். இவர்கள் இருவரும் பேசும் வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications