Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் ஓடிடி:பத்த வச்சவங்களையும்,வத்தி வச்சவங்களையும்..புது விளக்கம்,எதிர்பார்ப்பை கூட்டும் கமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

முதல் ப்ரமோவில் நிகழ்ச்சிக்கானா முழு விளக்கத்தையும் கமல் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் அறிமுகம்

பிக்பாஸ் அல்டிமேட் அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது வெற்றிகரமாகவும், பிரம்மாண்டமாகவும் முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பலர் மிஸ் பண்ணி வருவதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்களை மேலும் என்டர்டைன்மெனட் கொடுக்கும் விதமாக பிக்பாஸ் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளி பரப்பும் விதமாக புதுவித முயற்சியில் இறங்கியுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் ஓ டி டி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தொகுப்பாளர் கமல் தான்

தொகுப்பாளர் கமல் தான்

இந்த அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்கப் போகிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு கிடைத்த நல்ல செய்தி என்று பலரும் கூறி வருகின்றனர். பிக் பாஸ் தமிழின் முதல் ஓ.டி.டி பிரத்யேக சீசனை ஜனவரி 30ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒ.டி.டி பதிப்பிற்கு பிக்பாஸ் அல்டிமேட் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஐந்து சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இதில் போட்டியாளர்களும் இதற்கு முன்பு சீசன்களில் கலந்து கொண்டவர்கள் தான்.

அதே வீடுதான்

அதே வீடுதான்

ஒடிடி பதிப்பையும் தொகுத்து வழங்குவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய பரிமாணத்தில் இனி 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று கமல் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ்க்கு தான் இனி அதிகமான வேலை இருக்கும் என்று தன்னுடைய நையாண்டியை தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஐந்தாவது சீசன் நடைபெற்று முடிந்த பிக் பாஸ் வீட்டிற்குள் தான் இந்த அல்டிமேட் சீசன் தொடங்க இருக்கிறது.

பழக்கமான பதறவைக்கும் போட்டியாளர்கள்

பழக்கமான பதறவைக்கும் போட்டியாளர்கள்

அந்த வீட்டை பார்வையிடும் சிறப்பு விருந்தினரை போல கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாலும் அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் நபர்களிடம் பிக்பாஸ் வீட்டின் சுவற்றை இன்னும் உயரத்திற்கு எழுப்புங்கள், அதை நானே சொல்கிறேன் காரணம் உள்ளே வரும் போட்டியாளர்கள் அப்படிப்பட்டவர்கள் என்று கொஞ்சம் பில்டப் அதிகமாகத்தான் கொடுத்திருக்கிறார். ஏன்னா நாம சுவற்றை தாண்டுபவர்களையும் பார்த்து இருக்கோம் என்று விளக்கமும் கொடுத்துள்ளார். இப்ப வர போறவங்க... வத்தியும் வச்சிருக்காங்க, வீட்டையும் பத்தியும் வச்சிருக்காங்க..என்று கூறியுள்ளார். அடுத்ததாக கடந்த சீசன்களில் போட்டியாளர்கள் ஒருசிலர் பிக்பாஸை பஞ்சாயத்துக்கு அழைத்த சவுண்ட் எபெக்ட் களைப் போட்டு கமல் பலமாக தலையாட்டி கொண்டிருக்கிறார். பின்னணியில் ஒலிக்கும் குரல் வனிதாவின் குரல் என்பதை தெரிந்த ரசிகர்கள் சிரித்து வருகிறார்கள்.

Recommended Video

    Bigg Boss Ultimate Tamil Promo Released | Vanitha,Bharani Confirm
    24மணி நேரமும் என்டர்டைன்மென்ட் தான்

    24மணி நேரமும் என்டர்டைன்மென்ட் தான்

    விட்டதை பிடிப்பதற்காக வீட்டிற்குள்ளே வரப்போறாங்க, விடாம மல்லுக்கட்ட போறாங்க..இருபத்தி நான்கு மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விடாமல் பார்க்கலாம் என்று விளக்கத்தோடு தன்னுடைய கதையை முடித்திருக்கிறார். அடுத்ததாக இனி உங்களுக்கு தான் வேலை அதிகம். அதனால் சுடுதண்ணியில் உப்பு போட்டு....என்று ஆரம்பித்தவர் உங்களுக்கு தெரியாததா??என்று முடித்துக் கொண்டார். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சிக்காக வெயிட்டிங் என்று கூறிவருகின்றனர். இன்னும் ஒருசிலர் அப்போ யாரும் வேலைக்கே போக வேண்டாமா??என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+