"ராபர்ட்க்காக அப்படி யாரும் செய்யாதீர்கள்” இனி இதுதான் சரி! ரட்சிதாவின் கணவர் வெளியிட்ட திடீர் பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதாவின் கணவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் தன்னுடைய மனைவியான ரட்சிதா கூறிய அதே பதிலை தினேஷ் கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு அறிவுரை கூறி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இடையில் வந்தவரால் பிரச்சனை
பல வருடங்கள் எதிர்பார்ப்பின் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்திருக்கும் ரட்சிதா மகாலட்சுமி இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானதும் இவர் கடைசி வரைக்கும் செல்வார் என்று இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இவரோடு சக போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களின் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பமான புதியதில் என்னுடைய க்ரஸ் என்று கூறி தன்னுடைய பேச்சுவார்த்தையை தொடங்கிய ராபர்ட் மாஸ்டர் நாட்கள் செல்ல செல்ல ரட்சிதாவிடம் அதிகமாக அட்வான்டேஜ் எடுத்து வருகிறார்.

பல சீசன்களின் மீனாட்சி
ரட்சிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இருக்கிறார் அவருடைய கணவரும் சின்னத்திரை நடிகரான தினேஷ் கார்த்திக் தான். ரட்சிதாவின் முதல் சீரியல் ஆன பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் தான் .முதல் சீரியலில் கருப்பு தேவதையாக நடித்த ரட்சிதா அடுத்தடுத்த சீரியல்களில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவருடைய கேரக்டரை பிடித்துப் போனார் ரசிகர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து பல சீசன்களில் மீனாட்சி ஆக இவரை ஏற்றுக்கொண்டனர்.

போன் நம்பருக்காக கெஞ்சல்
தற்போது ரட்சிதா மற்றும் அவருடைய கணவரான தினேஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஒரு சில நாட்களாகவே தினேஷ் தன்னுடைய கோபத்தையும் வெறுப்பையும் காட்டி வருகிறார். அதே நேரத்தில் தன்னுடைய மனைவியின் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையும் காதலையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்,எபிசோட்டில் கூட ரட்சிதாவிடம் போன் நம்பர் கேட்டு ராபர்ட் மாஸ்டர் கெஞ்சி கொண்டிருக்கிறார். இப்படி போன் நம்பர் தர வேண்டிய அவசியம் இல்லையே எதற்காக இப்படி பண்ணுகிறீர்கள் என்று கேட்க எனக்கு நம்பர் தருவியா இல்லையா என கேட்டு கிச்சன் சைடில் சுற்றிக்கொண்டே வருகிறார்.

சூப்பர் அட்வைஸ்
அதுபோல நேற்றைய எபிசோடில் ரட்சிதா ஒரு நோட்டில் மணிகண்டனுக்கு லவ் யூ லாட் என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதை குறித்து எப்படி நீ லவ் யூ என்று எழுதலாம் என கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் ராபர்ட் மாஸ்டரின் பெயரும் இருக்கிறது. குறிப்பாக இந்த வார ஓபன் நாமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் இன் பெயரை ரட்சிதாவும் கூறி இருந்தார். ராபர்ட் மாஸ்டருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதுபோல தனியாக விளையாட்டை விளையாட வேண்டும் என்று ரட்சிதா முகத்துக்கு நேராகவே அறிவுரை கூறியிருந்தார் .தற்போது அதையே அவருடைய கணவரான தினேஷும் ராபர்ட் மாஸ்டரை பற்றி கூறியிருக்கிறார்.

ரசிகர்களிடம் வேண்டுகோள்
சினிமாவில் பல வாய்ப்புகள் கிடைத்தும் தக்கவைத்துக் கொள்ளாத ராபர்ட் மாஸ்டருக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ் அதையும் கோட்டை விட்ட ராபர்ட் வெளியேறுவது தான் சரி. ராம் மற்றும் மணிகண்டன் பல கனவுகளோடு பிக் பாஸ்க்கு வந்துள்ளனர். அவர்களுக்கு மேலும் தொடர ஓட்டு செய்து வாக்களிப்பது எனக்கு சரியாக படுகிறது. புதியவர்களின் கனவுகள் வெற்றி பெற வழி செய்வோம். ப்ளீஸ் சரியான நபருக்கு ஓட்டு செலுத்துங்கள் என்று பதிவை வெளியிட்டு தன்னுடைய ஓட்டு இன்று ராமுக்கு தான் என ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதையும் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு சில நெட்டிசன்கள் இதை கலாய்த்து வந்தாலும் ரட்சிதாவின் தீவிரமான ரசிகர்கள் நாங்களும் இதை தான் செய்வோம் என்று கருத்து கூறி வருகிறார்கள்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications