Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் தமிழ் 5:மேடையில் சொல்லாத வார்த்தை... சமூக வலைத்தளத்தில் ராஜுவின் செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்று வெளியே வந்துள்ள ராஜு சமூகவலைதளத்தில் முதல்முறையாக பதிவிட்ட போஸ்ட் பலரையும் கவர்ந்துள்ளது.

ராஜுவின் போஸ்ட்க்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐந்தாவது சீசனின் வின்னர்

ஐந்தாவது சீசனின் வின்னர்

நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆக தேர்வாகி இருக்கும் ராஜு சமூகவலைத்தளத்தில் முதல்முறையாக போஸ்ட் போட்டுள்ளார். இது பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ஒரு பக்கம் ரசிகர்களின் மத்தியில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் இதை செய்ய மாட்டேன் என்று கூறிய அதே ராஜூவா இப்படி செய்திருக்கிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

அதிகரிக்கும் பட வாய்ப்புகள்

அதிகரிக்கும் பட வாய்ப்புகள்

சின்னத்திரையில் காமெடி நடிகராக அதுவும் சைடு கேரக்டரில் அறிமுகமாகி, தற்போது பட்டிதொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் ராஜு சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும், இவர் மீண்டும் சின்னத்திரையில் வருவாரா??என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு மூன்று படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

தன்னுடைய திறமையை காட்டுவதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் கிடைக்காதா? ? என்றுதான் பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது பல வருட போராட்டம் நிறைவேறி உள்ளது. இவருடைய திறமையை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். அதனால் இனி இவர் திரையில் ஜொலிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று பலரும் கருத்துக்களையும், ஆசீர்வாதங்களையும் இவருக்கு அள்ளிக் குவித்து வருகிறார்கள். ரசிகர்களின் பேராதரவோடு இந்த சீசனில் வெற்றி அறிவிக்கப்பட்டதும் தங்கள் வீட்டில் ஒருவர் ஜெயித்தது போல பல ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

Recommended Video

    Thamarai Selvi சீக்கிரம் வெளிய போயிட்டா Priyanka First live After Bigg Boss
    முதல் போஸ்ட்

    முதல் போஸ்ட்

    பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தியபடி நான் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூற மாட்டேன் அவர்களுக்கு பிடித்தமாதிரி பல செயல்களை தான் செய்வேன் என்று உருக்கமாக கூறி இருந்தார். இதைக் கேட்டு பலரும் ஃபீல் பண்ணி வந்தனர். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தமிழ் மக்களே என்று கேப்ஷனோடு இவர் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். இதற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும், பலர் நன்றி கூறி தங்களை பிரிக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+