எல்லாமே முடிந்த பிறகு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய போட்டியாளர்கள்.. கடைசியில் கூறிய அந்த வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 104 ஆவது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த சீசனில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் மூன்று போட்டியாளர்களும் தங்களுடைய ரசிகர்களுக்கு நன்றியை கூறி தங்களுக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே நேற்றோடு வாக்கு செலுத்துதல் முடிவடைந்து இருக்கும் நிலையில் இன்று இவர்கள் தங்களுக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டிருப்பது ரசிகர்களின் மத்தியில் கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

கடைசியில் மூன்று போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையோடு முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனில் இறுதி கட்டத்தில் விக்ரமன், அசீம், ஷிவின் என மூன்று போட்டியாளர்கள் மட்டுமே நுழைந்து இருக்கின்றனர். இவர்களில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்று ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்தே கணிக்க முடியாத கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. கடைசி நேரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற மாதிரி ஏதாவது மாற்றம் நடைபெறுமா? அல்லது இந்த சீசனில் விக்ரமன் அல்லது அசீமின் வெற்றிதான் உறுதி செய்யப்படுமா? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களிடம் வேண்டுகோள்
இந்த நிலையில் இன்றைய முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வழக்கமாக சனிக்கிழமை எபிசோடு என்றால் கமல்ஹாசனின் என்ட்ரி தான் முதல் பிரமோவில் வெளியாகும். அதுவும் மதியம் தான் எப்போதும் பிரமோ வெளியாகும் ஆனால் இன்று காலையில் பிரமோ வெளியாகி இருக்கிறது. அந்த நேரத்தில் உள்ளே இருக்கும் மூன்று போட்டியாளர்களும் தங்களுக்கு இதுவரைக்கும் வாக்கு செலுத்தி ஆதரவு தந்து இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றிகளை கூறியிருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்கு ரசிகர்கள் வாக்கு செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

க்ளோஸ் பண்ணியாச்சே
ஆனால் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வாக்கு செலுத்துதல் முறை ஒவ்வொரு வாரமும் இருந்து வரும் அந்த வகையில் நேற்றோடு இந்த வாரத்தின் இறுதி வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் ப்ரோமோவில் இவர்கள் வாக்கு கேட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியாக பேசி இருக்கின்றனர். இதைப் பார்த்து சிலர் கலாய்த்து கொண்டிருந்தாலும் தங்களுடைய வாக்கு ஏற்கனவே செலுத்தி விட்டோம் என்று சிலர் பதில்களை கூறி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் இந்த சீசனில் டைட்டில் வின்னர் விக்ரமன்தான் ஏற்கனவே நேற்று வாக்குகளின் அடிப்படையில் அவர்தான் முன்னணியில் இருக்கிறார் என்று கருத்து கூற, இல்லை அசீம் தான் டைட்டில் வின்னர் என்று அவருடைய ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடைசி நேர ஆதரவு
21 போட்டியாளர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் 3 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். மீதமிருக்கும் மூன்று போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் ஷிவின் மட்டும்தான் பெண் போட்டியாளர். மீதமிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஷிவினுக்கு அதிகமான ரசிகர்கள், பிரபலங்களின் பாராட்டும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் விக்ரமனுக்கும் அவருடைய ரசிகர்களின் ஆதரவும், பிரபலங்கள் அரசியல் பிரமுகர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. அசீம்மிற்கு அவருடைய ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் கடைசி நேரத்தில் வாக்கு கேட்டு ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications