முதல்முறையாக ஷிவின் வெளியிட்ட வீடியோ.. பாராட்டி பாசத்தைக் காட்டும் நடிகைகள்.. குவியும் வாழ்த்துக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக ஷிவின் தனக்கு ஓட்டு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் கழித்து முதல் முறையாக ஷிவின் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தான் இதுவரைக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஷிவின் வெளியிட்ட வீடியோவிற்கு சின்னத்திரை நடிகைகளான ஸ்ரீதேவி, நேகா போன்ற பலர் பாராட்டி இருக்கின்றனர்.

மாற்றத்தை ஏற்படுத்திய போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆகின்ற நிலையில் முதல்முறையாக ஷிவின் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.இதுவரைக்கும் தான் ரசிகர்களிடம் பேசாததற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஷிவின் ஒரு திருநங்கை போட்டியாளராக இந்த சீசனில் அறிமுகம் ஆகி ஒட்டுமொத்த திருநங்கைகளின் மீதும் நல்ல மதிப்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறார் என்று இவரை அதிகமாக அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். முதல் முறையாக கடந்த சீசனின் நமீதா மாறி முத்து திருநங்கை போட்டியாளராக அறிமுகம் ஆக இருந்தார் .அவரை தொடர்ந்து இந்த சீசனில் அறிமுகமான ஷிவின் கடைசி நாள் வரைக்கும் இருந்து ரன்னர் அப் ஆக தேர்வாகி இருக்கிறார்.

அதிகமாக நாமினேஷனில் இல்லை
ஷிவின் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக வரவேண்டும் என்று அவருக்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவின் ஒரு தகுதியான போட்டியாளராக இருக்கிறார் என்று சக போட்டியாளர்களால் தொடர்ந்து 11 வாரங்கள் இவர் நாமினேஷன் செய்யப்படாமலே இருந்த நிலையில் கடைசியாக இவர் நாமினேஷன் செய்யப்பட்டாலும் ரசிகர்களால் பாதுகாக்கப்பட்டு மீண்டும் இவர் அந்த வீட்டிற்குள்ளே அனுப்பி வைக்கப்பட்டார். இது இவருக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் வரவேற்பாகவும் இருக்கிறது. இதுவரைக்கும் எந்த சீசன்களிலும் இத்தனை வாரங்கள் தொடர்ச்சியாக எந்த போட்டியாளரும் நாமினேஷனில் வராமல் இருந்தது இல்லை இந்த நிலையில் அது ஷிவினாகத்தான் இருந்திருக்கிறார்.

கடைசி நேர ஏமாற்றம்
இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஷிவின் அல்லது விக்ரமன் என்று அதிகமான ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் அசீம் டைட்டில் வின்னராக மாறியது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தான் வந்த வேலை பாதி நடந்து விட்டது என்று ஷிவின் கூறி இருந்தார். தான் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை எனக்கு ஆரம்பத்தில் இருந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது நான் மூன்று நான்கு வாரங்கள் தாண்டுவதே அதிகம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் 106 நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு இருந்தது என்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்களால் தான் என்று உருக்கமாக கூறியிருந்தார்.

பிரபலங்களின் பாராட்டு
இந்த நிலையில் இன்று முதல்முறையாக ஷிவின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் .இத்தனை வாரங்கள் தான் இந்த வீட்டிற்குள் இருந்ததற்கு ரசிகர்கள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தான் இதுவரைக்கும் வீடியோ வெளியிடாததற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. சின்னத்திரை நடிகை ஆன ஸ்ரீதேவி அசோக், பாக்கியலட்சுமி சீரியலின் இனியாவாக நடிக்கும் நேகா போன்ற பல பிரபலங்களும் வாழ்த்துக்கூறி அவரை பாராட்டி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சீரியல் நடிகை ஸ்ரீதேவி வலிமையான பெண்ணே உன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஷிவின் பதில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications