எங்க அம்மா அப்பாவுக்கு பிறகு இப்படி செஞ்சது இவங்கதான்..உருக்கமாக பேசிய ஜிபி முத்து..எகிறும் லைக்குகள்
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டிருக்கும் ஜி பி முத்து பேசியது தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது.
எப்போதுமே வெள்ளந்தியான பேச்சால் அனைவரையும் கவர்ந்து வரும் ஜிபி முத்து தற்போது தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே பேசி அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் செய்ததை புகழ்ந்து பேசிய ஜிபி முத்துவிற்கு லைக்குகள் அதிகரித்து வருகிறது.

முதல் போட்டியாளர்
விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பலமொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஆறாவது சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 20 போட்டிகள் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இதில் ஒரு போட்டியாளராக ஜிபி முத்துவும் அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் கடந்த சீசனில் வருவார் என்று ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் வராமல் ஏமாற்றத்தை கொடுத்து விட்டு இந்த சீசனில் ரசிகர்களுக்கு என்டர்டெயின்மெண்ட் கொடுக்க வந்துவிட்டார்.

நான்கு அணிகள்
சமூக வலைதளத்தில் பலருக்கும் பரீட்சையுமான ஜி பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அவருடைய ரசிகர்களும் நெட்டிசன்களும் அவருக்காக பல பேன்ஸ் பேஜ்களை தொடங்கி விட்டார்கள். அதில் ஜி.பி முத்துவின் செய்திகளை மீம்ஸ்களாக பதிவிட்டு ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் பிக் பாஸ் சக போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுத்திருக்கிறது ..4 அணியாக போட்டியாளர்கள் பிரிந்து தங்களுடைய வேலைகளை செய்து வருகின்றனர் .அதில் ஜி.பி முத்து பாத்திரம் கழுவும் அணியில் இருந்து வருகிறார்.

பாத்ரூம் அணியிடம் அலப்பறை
பாத்ரூம் அணியில் இருக்கும் நான்கு போட்டியாளர்களும் மற்ற அணியில் இருக்கும் சக போட்டியாளர்கள் பெல் பட்டனை அழுத்தியதும் அவர்களை தூக்கிக்கொண்டு பாத்ரூம் உள்ளே விட வேண்டும். அது மட்டும் அல்லாமல் பாத்ரூம் செல்லும்போது அவர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் நாளே ஜி பி முத்து அந்த அணியிடம் மாட்டிக் கொண்டு அலப்பறையை செய்திருந்தார். ஜி பி முத்துவை பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியதும் ராபர்ட் மாஸ்டர் அவரை தூக்கி கொண்டு பாத்ரூம் உள்ளே கொண்டு விட்டார்.

ஜி பி முத்துவின் நெகிழ்ச்சி
இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியினருக்கும் எதர் அணியினர் மார்க் கொடுத்து வருகின்றனர். அதில் ஜி.பி முத்து பாத்ரூம் அணியினருக்கு தான் முழு மதிப்பெண் கொடுப்பதாக கூறியிருக்கிறார். காரணம் தன்னுடைய அம்மா அப்பாவிற்கு பிறகு இவரை பாத்ரூம் செல்வதற்காக இடுப்பில் தூக்கிக் கொண்டு சென்றது இவர்கள் தானாம். அதனால் அவர்களை என்னால் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதை மீம்ஸ்களாக கலாய்க்கும் ரசிகர்கள் ஜி பி முத்து க்கு அதிகமான லைக்களை கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications