பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கிராண்ட் பினாலே: விக்ரமனுடைய வெற்றி நழுவியதற்காக கண்ணீரோடு பதிவிட்ட நடிகர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகி இருக்கிறார்.
ரன்னராக விக்ரமனும் அவரைத் தொடர்ந்து ரன்னர் அப் ஆக ஷிவினும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் என்கிற புலி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றே வெளியீட்டு தன் உடைய கண்ணீர் வார்த்தைகளை பதிவு செய்து இருக்கிறார்.

நழுவிய வெற்றி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு முடிவடைய இருக்கிறது. இன்று தற்போது கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 100 நாட்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த எதிர்பார்ப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து விக்ரமன் ஜெயிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் ஆசைகளை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அசீம் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் விக்ரமுடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் சோகமான பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எங்கேயும் ஒலித்த குரல்
சின்னத்திரை நடிகராகவும் ஒரு ஜர்னலிஸ்ட் ஆகவும் இருந்தாலும் தான் ஒரு அரசியல் பிரமுகர் என்கிற ஒரு அங்கீகாரத்தோடு தான் விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே எந்த இடத்திலும் நேர்மை தவறாமல், கண்ணியம் தவறாமலும், தன்னுடைய வார்த்தைகளால் பிறரை குறைவாக பேசாமல் தனக்கென்று தனி மரியாதையை உருவாக்கிக் கொண்டு, ரசிகர்களை கவர்ந்து இருந்தவர். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் உருவாகி இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் எத்தனையோ பிரச்சனைகள் நடந்திருந்தாலும் எங்கேயும் தன்னுடைய கேள்விகளை தயங்காமல் கேட்டு யார் கோபப்பட்டாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அந்த இடத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்.

அரசியல் பிரமுகர்களின் ஆதரவு
எந்த இடத்திலும் அறம் வெல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்த விக்ரமன் கடைசி நேரத்தில் அவர்தான் டைட்டில் ஜெயிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பட்ட பிரபலங்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தனர். அவர் உறுப்பினராக இருந்த வீசிக கட்சியின் தலைவர் எம்எல்ஏ என அரசியல் பிரமுகர்களும் விக்கிரமனுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் வாக்கு சேகரிக்க தொடங்கினர். ஆனால் இதுதான் விக்ரமனுடைய வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுவரைக்கும் விக்ரமனுக்கு அதிகமானோர் சப்போர்ட் செய்து கொண்டிருந்த நிலையில் அரசியல் சப்போர்ட் விக்ரமனுக்கு இருக்கிறது என்கிற ஒரு நிலைக்கு கடைசி நேரத்தில் அவருடைய பெயர் வந்து விட்டது.

சீரியல் நடிகரின் கண்ணீர் பதிவு
இந்த நிலையில் சொற்ப வாக்குகளின் வித்தியாசத்தில் முதலிடத்தை விக்ரமன் நழுவ விட்டிருக்கிறார். இது விக்ரமனுடைய ரசிகர்களை அதிகமாக கவலை அடைய வைத்திருக்கிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து சின்னத்திரை நடிகராக இருக்கும் ராகவேந்திரன் புலி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் விக்ரமன் இரண்டாவதாக ரன்னராக தேர்வாகி இருப்பதால் தன்னுடைய வருத்தத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். "முதல் முறையாக ஒரு கேம் ஷோவிற்கு பிக் பாஸ் விக்ரமன் என்ற போட்டியாருக்காக 5 நிமிடங்கள் அழுதேன். மன்னிக்கவும் நண்பா! டோன்ட் ஒரி. ஆனால் நீங்கள் தகுதியானவர் என்று நினைத்தேன். உங்களின் மீது மிகுந்த மரியாதை உள்ளது விக்ரமன்"என்று கூறியிருக்கிறார். ராகவேந்திரன் காலங்கள் கானும் காலங்கள் சீரியலில் அறிமுகமாகி கடைசியாக காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது விலகி இருக்கிறார். அவருடைய பதிவு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications