Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கிராண்ட் பினாலே:ஷிவனுக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு..நெகிழ்ச்சியான நிகழ்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எதிர்பாராததை எதிர்பாராதங்கள் என்று சொல்கின்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து டைட்டில் ஜெயிப்பார் என நினைத்திருந்த ஷிவின் இரண்டாவது ரன்னர் அப் ஆக வந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஷிவினை பிக் பாஸ் கிராண்ட் பினாலே மேடைக்கு அழைத்து செல்வதற்காக நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆரி வந்திருக்கிறார்.

இரண்டாவது ரன்னர் அப்

இரண்டாவது ரன்னர் அப்

சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்பாராத மாற்றங்களும் செயல்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து இவர் தான் டைட்டில் வின்னர் என்று அடித்து கூறிய போட்டியாளரின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாறி போயிருக்கிறது. ஆரம்பத்தில் ஆரம்பத்தில் இருந்து திருநங்கை போட்டியாளராக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக பல்வேறு செயல்களை செய்து எந்த இடத்திலும் தனித்தன்மையை காட்டி வந்த ஷிவின் கடைசியில் இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்

வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்

ஷிவின் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று திருநங்கைகள் மட்டுமல்லாமல் சக ரசிகர்களும் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஷிவனுடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவின் அவர் நினைத்த மாதிரி சமுதாயத்தில் சம அந்தஸ்து பெற்று அவருடைய திறமைக்கு தகுதியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு ஆசிர்வாதங்கள் கூறி வாழ்த்தி பல்வேறு மீம்ஸ் களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆரியின் வரவேற்பு

ஆரியின் வரவேற்பு

இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த ஆரி மரியாதை நிமித்தமாக டிவினை பாராட்டி கிராண்ட் பினாலேக்கு கூட்டி வர இருக்கிறார். இதை ஆரியுடைய ரசிகர்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். சரியான நபருக்கு ஆரியின் ஆதரவு கிடைத்திருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஆரி தன்னுடைய ஆதரவு விக்ரமனுக்கு என்று கூறியிருந்தார். ஆனால் சமூக வலைதளத்தில் விக்ரமனுக்கும், ஷிவினுக்கும் சம அளவு வரவேற்பு இருக்கும் நிலையில் ஷிவனுடைய வரவேற்பை ஆரி செய்து இருப்பது ரசிகர்களுடைய மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாழ்க்கையிலும் வெற்றி தான்

வாழ்க்கையிலும் வெற்றி தான்

இந்த நிலையில் இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வான ஷிவினை அவருடைய நெருங்கிய தோழியான ரச்சிதா மகாலட்சுமி அவருடைய அம்மாவோடு சந்தித்து விதவிதமாக செல்பி எடுத்து மகிழ்ந்து இருக்கின்றனர். அம்மாவும் மகளும் ஷிவினுக்கு மாறி மாறி முத்த மழைகளை கொடுத்து இனி நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என்று இவர்களுடைய நட்பு பாசத்தை வழிகாட்டி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனிநபராக அறிமுகமாகி தற்போது அவரை சமுதாயத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளராகவும் தங்கள் வீட்டு பெண்ணாகவும் பலர் பார்த்து வரும் நிலையில் இனி இவருடைய வாழ்க்கையில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+