பிக் பாஸ் 6: முதல் நாமினேஷன் ப்ராசஸ்..போட்டுக் கொடுக்கும் போட்டியாளர்கள்.. ஜி பி முத்து செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் முதல் வார நாமினேஷன் இன்று தொடங்கி இருக்கிறது.

போட்டியாளர்கள் இந்த வாரம் யாரை நாமினேசன் செய்யப் போகிறார்கள் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று இவர்கள் மற்றவர்களை போட்டு கொடுத்து வருகிறார்கள்.

முதல் வார நாமினேஷன் ப்ராசஸ்

முதல் வார நாமினேஷன் ப்ராசஸ்

பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது ஒரு வாரம் முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் 40 நாட்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் ஒரு வாரத்தில் நடந்து வருவதாக கமலே சனிக்கிழமை எபிசோட்டில் கூறியிருந்தார். கலவரங்களும் சண்டை சச்சரவுகளும் முதல் வாரத்திலே இந்த அளவிற்கு தூக்கலாக தொடங்கி இருப்பது பார்க்கும் ரசிகர்களுக்கு என்டர்டெயின்மென்ட் கொடுத்து வருகிறது. முதல் வாரம் முடிவடைந்ததும் ஒவ்வொரு சீசனும் தொடர்ந்து வரும் சம்பிரதாயமான எவிக்ஷன் ப்ராசஸ் இன்று தொடங்கி இருக்கிறது.

ஆயிஷாவின் கருத்து

ஆயிஷாவின் கருத்து

போட்டியாளர்கள் தங்களுக்கு யாரை போட்டியாளர்களாக நினைக்கிறார்களோ அவர்களை இந்த வாரம் எவிக்ஷனில் நிறுத்துவதற்காக ஓட்டு அளித்து வருகின்றனர். அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அடுத்த போட்டியாளர்களைப் பற்றி கூறும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருந்து வருகிறது. இன்றைய எபிசோட் முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் இந்த வார எவிக்ஷனுக்கான முதல் நாமினேசன் பிராசஸ் என்று சொன்னதும், முதல் ஆளாக ஆயிஷா தன்னுடைய கருத்தை கூறி நாமினேஷன் செய்கிறார். அவர் சிவில் கணேசனை நாமினேஷன் செய்கிறார்.

போட்டி போடும் காரணங்கள்

போட்டி போடும் காரணங்கள்

ஆயிஷாவை தொடர்ந்து வந்த ராபர்ட் ஆயிஷா வந்து எதற்கு எடுத்தாலும் கத்தி கத்தி சாதித்கிறாங்க என்று ஆயிஷாவை நாமினேஷன் செய்கிறார். அதைத் தொடர்ந்து அசல் கோளார் சாந்தி மாஸ்டரை நாமினேஷன் செய்கிறார். அவரிடம் ஒரு டாமினேஷன் கேரக்டர் இருப்பதாக கூறி அசல் சாந்தி மாஸ்டரை செலக்ட் செய்கிறார். அதற்கு அடுத்து ஜி பி முத்து பேசுகிறார். அவர் குயின்ஸி செலக்ட் செய்து இருக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணம் ஒரு சில இடங்களில் சிலதை மட்டும் பேசிவிட்டு அப்படியே சென்று விடுகிறார். அவரிடம் ஒரு காமெடி கேரக்டர் எதுவும் வீட்டிற்குள் இல்லை என்று கூறி குயின்ஸியை ஜிபி முத்து செலக்ட் செய்கிறார்.

இந்த வாரம் தெரியும்

இந்த வாரம் தெரியும்

அடுத்ததாக வந்த குயின்ஸி ரட்சிதாவை நாமினேஷன் செய்கிறார். காரணம் ரட்சிதாவிற்கு இன்னொரு ஃபேஸ் இருக்கிறது. அதை இன்னும் காட்டவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் அவரை செலைட் செய்வதாக ரட்சிதாவை குயின்ஸி நாமினேஷன் செய்திருக்கிறார். போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு நாமினேஷன் செய்தாலும் இந்த வாரம் யார் யாரெல்லாம் எலிமினேஷனுக்கு வருவார்கள் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+