தனலட்சுமியை பிடித்து தள்ளிய அசீம்.. இதை யாராவது கவனிச்சீங்களா? என்ன நடிப்புடா சாமி..!?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 18 வது நாளில் முதல் ப்ரோமோவில் அசீம் தனலட்சுமியை பிடித்து தள்ளியதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நேற்று வரை மனிதநேயம் பற்றி பேசிய அசீம் இப்படி எல்லாம் செய்யலாமா என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
டாஸ்க்கில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளுவதை பார்க்கும் போது இன்று தரமான செய்கை இருக்கிறது என்று தோன்றுகிறது.

ரசிகர்களின் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பஞ்சாயத்து வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் முதல் வாரத்தில் ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் இருக்கும்போது பல சுவாரஸ்யமான காமெடி நிகழ்வுகள் நடந்து வந்ததாகவும் ,ஆனால் இப்போது இரண்டு வாரமும் சண்டை சச்சரவுகள் மட்டும்தான் அதிகமாக இருந்து வருவதாகவும், ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் சண்டைக்கு காரணமாகவோ அல்லது அந்த சண்டையில் எங்கிருந்தாவது வந்து உள்ளே புகுந்துவிடும் ஒரு நபராக அசீம் இருந்து வருகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடரும் பிரச்சனைகள்
எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமாக பிரச்சனைகள் நடந்து வருவதாக கமல் முதல் வாரத்திலேயே கூறியிருந்தார். பொதுவாக இதற்கு முந்தைய சீசன்களில் 48வது நாள் நடப்பதை எல்லாம் இந்த முதல் வாரத்தில் தொடங்கிவிட்டது என்று கூறியிருந்தார். அதுபடி தான் முதல் வாரத்தில் ஜிபி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் ஒரு பக்கம் பிரச்சனை, அடுத்த பக்கம் அசல் மற்றும் ஆயிஷா இடையே பிரச்சனை அதற்கு அடுத்தது அசல் மற்றும் தனலட்சுமி இடையே பிரச்சனை என்று அடுக்கிக் கொண்டே போகலாம் அந்த வகையில் தினமும் ஒவ்வொரு புது புது பிரச்சனைகள் முளைத்துக் கொண்டே வந்தது.

அசீம் வைத்த குற்றசாட்டு
தற்போதைய நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் திங்கட்கிழமையில் இருந்து தொடங்கியிருக்கிறது. போட்டியாளர்களின் விளையாட்டு விவேகமாகவும், வெறித்தனமாகவும் இருந்து வருகிறது. தங்கள் பெயர் வைத்திருக்கும் பொம்மைகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சில போட்டியாளர்கள் கத்தி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதில் அசீம் ஒருவர். நேற்று பார்க் ஹவுஸில் பொம்மைகளை வைக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும்போது ஷிபின் கழுத்தை பிடித்து தள்ளி இருக்கிறார். அதற்கு பிறகு ஷெரின் கீழே விழுந்ததற்கு தனலட்சுமி தான் காரணம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் மனிதநேயமும் இல்லாமல் தனலட்சுமி பிடித்து தள்ளிவிட்டார் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.

மனித நேயம் எங்கே போச்சி
போட்டியாளர்கள் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது தனலட்சுமி பார்க் ஹவுஸில் இருக்கும் பொம்மையை எடுத்து வெளியே வீசி அந்த ஹவுஸ்க்குள் யாரையும் செல்ல வெளியே விடாமல் இரண்டு கைகளையும் தூக்கி பிடித்த படி நிற்கிறார். அப்போது அசீம், நீ யாரு? வெளியே தூக்கி போட, தள்ளு என்று ஒரேடியாக தனலட்சுமியை பிடித்து தள்ளிவிட்டு உள்ளே போய் அந்த பொம்மையை வைக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர் நேற்று வரை மனித நேயம் என்று சொன்ன அசீம்க்கு மனிதநேயம் எங்கே போச்சி என்று கேள்வி கேட்டு வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications