கிராண்ட் பினாலே: முதலிடத்தை நழுவ விட்டு இரண்டாவது ரன்னர் அப் ஆன ஷிவின்.. மாற்றத்திற்கான காரணம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தொடங்கி இருக்கிறது.
தற்போது ஆறாவது சீசனில் ரன்னர் அப் போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முதலிடத்தில் வெற்றியாளர் ஆவார் என எதிர்ப்பாக்கப்பட்ட ஷிவின் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியேறி இருக்கிறது.

கிராண்ட் பினாலே
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு இன்றோடு முடிவடைய இருக்கிறது. இந்த சீசனில் இன்று கிராண்ட் பினாலே தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது மூன்று போட்டியாளர்கள் மட்டுமே கடைசி கட்டத்தை எட்டி இன்று மேடையில் ஏறி இருக்கின்றனர். இவர்களில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்து அதிகமாக ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.

கணிக்க முடியாத நிலை
இதற்கு முந்தைய சீசன்களில் இவர் தான் டைட்டில் வின்னர் என்று ஆரம்பத்திலேயே சிலருடைய பெயர் அழுத்தமாக அடிபட்டு வரும். ஆனால் இந்த சீசனில் அப்படி யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. மாறி மாறி ரசிகர்களின் மத்தியில் கருத்துக்கள் வந்து கொண்டிருந்தது. அந்த வகையில் அதிகமான ரசிகர்கள் கூறிய பெயர்கள் என்றால் அது விக்ரமன், அசீம், ஷிவின் தான் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இவர்கள் மூவரும் தான் கடைசியில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ரன்னர் அப் யார் என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

இரண்டாவது ரன்னர் அப்
இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கடைசி கட்டத்தை எட்டி இருந்த மூன்று போட்டியாளர்களுக்கும் எதிர்பார்க்காத வகையில் பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் கருத்தாகவும் பல பிரபலங்களின் கருத்தாகவும் இருந்தது ஷிவின் இந்த சீசன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று தான். ஆனால் அது தற்போது நடைபெறாமல் போய்விட்டது. ஷிவின் இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெற்றி தொடரட்டும்
திருநங்கை போட்டியாளராக அறிமுகமாகி எந்த இடத்திலும் தான் ஒரு திருநங்கை என்பதால் தனக்கு அனுதாபம் வேண்டும் என்று நடிக்காத அதே நேரத்தில் அதைக் கூறி சிம்பத்தி கிரியேட் பண்ணாமல் தன்னுடைய சமூகத்தை சமுதாயத்தில் சமமாக பார்த்தாலே போதும் என்கிற ஒரே கருத்தை மட்டுமே மையமாகக் கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ஷிவின் இந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டு இருந்தார். இதை வைத்து பலர் இவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஷிவனுடைய அம்மா மற்றும் அக்கா இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்களா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்ட வந்த நிலையில் கடைசி நேரத்திலும் ஷிவினுடைய குடும்பத்தினர் வரவில்லையாம். தற்போது ஷிவின் வின்னர் இல்லை ரன்னர் ரப் என்று கேள்விப்பட்டதும் அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications