
இரண்டு எவிக்ஷன், சீக்ரெட் அறைக்கு செல்ல இருக்கும் அந்த போட்டியாளர்... இணையத்தில் லீக்கான தகவல்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல் ஏற்கனவே கூறி இருந்த நிலையில் அதைக் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் இந்த வாரம் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவரை வைத்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த முறை பிக் பாஸ் அணியினர் செய்யப் போகிறார்களாம்.
டிஆர்பிக்காக பாக்கியலட்சுமி சீரியலில் தில்லாலங்கடி வேலை!அசீமை சீரியலுக்குள் கொண்டு வந்திருக்காங்களே!

எதிர்பார்க்கப்படும் என்ட்ரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 59 ஆவது நாட்களில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் சுமார் 50 நாட்களுக்கு மேலே புதியதாக வைல்ட் கார்டு என்ட்ரி அறிமுகமாகி விடுவார், அவர் வந்த பிறகு நிகழ்ச்சியில் விறுவிறுப்பு அதிகம் கூடும். ஆனால் இந்த சீசனில் எப்போது வைல்ட் கார்டு என்ட்ரி என ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே 21 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர். இப்போது 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல் ஏற்கனவே கடந்த வாரம் கூறி இருந்தார்.

வெளியேற்றப்படும் போட்டியாளர்கள்
இந்த நிலையில் இந்த வாரம் அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே, ஆயிஷா மற்றும் ராம் என ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களில் வாக்குகளின் அடிப்படையில் ராம், ஆயிஷா, ஏடிகே மூவருமே டேஞ்சர் நிலையில் தான் இருக்கின்றனர். அவர்களில் ராம் கடைசி இடத்தில் இருப்பதால் ராம் இந்த வாரம் வெளியேற அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ராம் உடன் அசீம் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அசீம் ரகசிய அறையில் காத்து இருக்க வைக்கப்பட்டு அவர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

ஏற்கனவே நடந்த தில்லாலங்கடி
கடந்த வாரத்தில் அசீமிற்க்கு அதிகமான ரசிகர்கள் கைதட்டல் கிடைத்த போதிலும், அதை லாவகமாக கமல் இது நான் சொல்லிக்கூட இவர்கள் கைதட்டலாம் என்று மாற்றிவிட்டார். அதேபோல இதற்கு முன்பும் ஒரு சில வாரங்களுக்கு முன்பு அசீம் முதலிடத்தில் சேவ் ஆன நிலையில், அவரை கடைசி வரை கொண்டு சென்று கடைசி நேரத்தில் அவர் சேவ் ஆனதை கூறியிருந்தார். இதனால் இந்த வாரத்திலும் முதலிடத்தில் சேவ் ஆகி இருக்கும் அசீம் வெளியேற்றப்பட்டு மீண்டும் உள்ளே வரும்போது போட்டியாளர்களின் நடவடிக்கைகள் எந்த விதத்தில் மாறப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

எதிர்பாராத திடீர் மாற்றம்
ஒவ்வொரு வாரமும் போட்டியில் அதிகமாக விறுவிறுப்பு ஏற்படுகிறதோ இல்லையோ சண்டை சச்சரவுகளில் அசீம் ஒரு நபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரத்தில் மாறுவேட போட்டியில் அசீம் சிவாஜி கணேசனின் கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருந்தாலும், இன்னும் ஒரு சில தினங்களில் அவர் என்ன மாதிரி எல்லாம் பிரச்சனைகளை செய்ய போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகின்றனர். என்னதான் இவர் பிரச்சனை செய்தாலும் இவர் நேர்மையாக முகத்துக்கு நேராக பேசுகிறார், தைரியமாக இருக்கிறார் என்று இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வாரம் திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் திணறப்போக இருக்கிறார்கள்.