சத்தமே இல்லாமல் கவனம் ஈர்த்து வரும் பிக்பாஸ் மூன்று போட்டியாளர்கள்.. செம பிளான் பண்ணி இருக்காங்க?
சென்னை:பிக் பாஸ் துவங்கி சில நாட்களே ஆன நிலையில் வீட்டிற்குள் சின்ன சின்ன களேபரங்கள் நடந்து வந்தாலும், சத்தமே இல்லாமல் மூன்று போட்டியாளர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றனர்.
அழகாகவும் அமைதியாகவும் வலம் வருகின்ற இந்த மூன்று போட்டியாளர்களளும் பெரிய அளவிற்கு பிரபலமாக இல்லாமல் இருந்தாலும்,அவர்களது நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் பெற்று மக்களிடம் அவர்களுக்கான ஆதரவை கூட்டி வருவதாக பலர் கூறி வருகின்றனர்.

யூகித்த போட்டியாளர்களே பலர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல்வேறு பிரபலங்கள் மட்டுமின்றி,பொதுமக்களில் இருந்தும் சிலர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.இந்த முறை போட்டியாளர்கள் தேர்வில் மிகுந்த சிரத்தை எடுத்த நிகழ்ச்சி குழு ஒவ்வொரு போட்டியாளர்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து களமிறக்கி உள்ளது. ஒவ்வொரு முறை பரவுவது போன்று ஒரு சில பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கப் போவதாக வதந்திகள் பரவினாலும் தற்பொழுது ஒரு வழியாக போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு நிகழ்ச்சியும் ஆரம்பமாகிவிட்டது.

எதிர்பாராத பங்கேற்பாளர்கள் சிலர்
பெரும்பாலும் ஓரளவிற்கு எதிர்பார்த்த போட்டியாளர்களே இருந்தாலும்,சில போட்டியாளர்கள் யாரும் எதிர்பாராத போட்டிகளாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.அவர்களுள் விஜே கதிரவன்,ஷெர்லின்,குயின்சி போன்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படி ஒரு போட்டியாளர்களே இருக்கிறார்கள் என்று பெரிதளவு வெளியே தெரியாவிட்டாலும், சத்தம் இல்லாமல் அவர்களது அமைதியான மற்றும் அழகான நடவடிக்கைகளால் பார்வையாளர்கள் பலர் தங்கள் ஆதரவை அவர்களுக்கு அளிக்க துவங்கியுள்ளனர்.

முக்கியத்துவம் பெறும் மூன்று நபர்கள்
நடிகையும் மாடலும் ஆன கேரளாவைச் சார்ந்த ஷெரீனா ஷாம் தன் உயரமான அழகான தோற்றத்தால் போட்டியாளராக அறிமுகமான பொழுதே ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார். மற்றொரு மாடலும் சின்னத்திரை நடிகையுமான குயின்ஷி யும் தற்பொழுது தன்னுடைய அமைதியான மற்றும் தனித்துவமான செயல்களால் ஆட்டோமேட்டிக்காக பிக் பாஸ் போட்டியாளராக வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறார்.விஜேவாக இருந்தாலும் அதிகமாக பேசாமல் தன்னுடைய ஆட்டிட்யூட்டால் பிக் பாஸ் பார்வையாளர்களின் கவனத்தை தன் மீது பட வைத்துள்ளார் விஜே கதிரவன்.

சத்தம் இல்லாமல் சப்போர்ட் ஏறுகிறது
சினிமா,சின்னதிரை மற்றும் சமூகவலைதளங்களில் பிரபலமான பலர் போட்டியாளர்களாக இருந்தாலும் இவர்கள் மூவரும் தற்போது வரை எந்தவித நெகட்டிவ் கமெண்ட்களையும் பெறாமல் பாசிட்டிவ் கமெண்ட்களை மட்டுமே பெற்று கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடத்தில் ஆதரவை பெற்று வருவதாக பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சி துவங்கிய சில நாட்களே ஆன நிலையில் போகப் போகத்தான் ஒவ்வொருவரது உண்மையான முகம் வெளிப்படும் என்றும், இந்த மூவரை பற்றியும் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும் என்றும் பலர் கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications