அசல் கோளாறுக்கு எதிராக குரல் கொடுத்த தனலட்சுமி..அட்வைஸ் பெயரில் சக போட்டியாளர்கள் செய்த மோசமான செயல்
சென்னை: நிகழ்ச்சியில் அசல் கோளாறு செய்த செயலுக்கு எதிராக தனலட்சுமி சண்டை போட்டு குரல் கொடுத்திருக்கிறார்.
அசல் கோளாறுவை வா போ என்று யாரும் கூப்பிடக் கூடாதாம் ஆனால் அவர் மட்டும் அனைவரையும் ஆன்ட்டி பெரியம்மா என்று கிண்டல் செய்வாராம்.
உருவ கேலி செய்ததை குறித்து தனலட்சுமி கொதித்து கொண்டிருக்கிறார். ஆனால் சக போட்டியாளர்கள் அவரிடம் வந்து பொறுமையாக இருக்கச் சொல்லி அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

சூடு பிடித்த சண்டை சச்சரவு
பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது .இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் அறிமுகமானதும் சண்டை சச்சரவுகள் முதல் வாரத்தில் சூடு பிடித்தது ரசிகர்கள் விரும்ப காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் தனலட்சுமிக்கும் அசல் கோளாறுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அசல் கோளாறு பற்றி சமூக வலைதளத்தில் ஏற்கனவே பல நெகட்டிவ் கருத்துக்கள் வளர்ந்து கொண்டிருக்கும்போது தனலட்சுமி செய்த செயலுக்கு அதிகமான பாராட்டும் வருகிறது.

கிச்சனில் தொடங்கிய வாக்குவாதம்
கிச்சன் அணியில் இருக்கும் தனலட்சுமி அங்கே வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த அசல் கோளாறு அனைத்து பெண்களிடம் பேசுவது போல இவரிடமும் பெரியம்மா ஆன்ட்டி என்று கலாய்த்தபடி பேசிக் கொண்டிருக்கிறார் .இதனால் கடுப்பான தனலட்சுமி உனக்கு என்ன பிரச்சனை? உன்னை மட்டும் யாரும் வா போ என்று சொன்னால் உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது .ஆனால் நீ பெரியம்மா ஆன்ட்டி என்று சொல்லுவதை மட்டும் நான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? எனக்கு நீறு தான் சோறு போட்டு வளர்த்தியா ?என்னை பார்த்து அப்படி சொல்ல நீ யாரு எனக்கு? என்று கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாயத்துக்கு வந்த போட்டியாளர்கள்
இவர்களின் பிரச்சனைக்கு பஞ்சாயத்து தீர்க்க வந்த போட்டியாளர்களில் ஏ டி கே, அசல் கோளாறிடம் உனக்கு என்று ஒரு தகுதி இருக்கிறது அதை கெடுத்துக் கொள்ளாதே இதை நிறுத்திக் கொள் என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதே போல அசீம் வந்து தனலட்சுமி இடம், நீ மக்கள் பிரதிநிதியா இங்கே வந்து இருக்க இப்படியெல்லாம் சண்டை போட்டால் மக்கள் உன்னை தூக்கி வெளியேற்றி விடுவார்கள் என்று அறிவுரை கொடுப்பது போல பேசி வருகிறார்கள். அதுபோல மகேஸ்வரி மற்றும் ஒரு சில போட்டியாளர்கள் அனைவருமே சுற்றி நின்று தனலட்சுமி தான் அமைதியாக இருக்க சொல்லி கூறி வருகிறார்கள்.

அட்வைஸுக்கு வரும் கருத்துக்கள்
அசல் கோளாறு ஆயிஷாவிடம் நன்றாக பழகி வந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களிலே ஆயிஷா தன்னை வாடா போடா என்று அழைப்பது பிடிக்காது என்று கூறியிருந்தார். ஆனால் பெண்களை தடவிக் கொண்டிருக்கும் அசல் ஒரு பெண்ணை அவருடைய அனுமதி இல்லாமல் ஆண்டி, பெரியம்மா என்று உருவத்தை வைத்து கலாய்ப்பது மட்டும் சரியா? என்று அசலுக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரைக்கும் தனலட்சுமியை திட்டி வந்த ரசிகர்கள் கூட தற்போது தனலட்சுமியின் கோபம் சரியானது என்று ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications