BB Tamil 8 finale மேடையில் ஜாக்குலினுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! சேதுபதி சொன்ன வார்த்தை.. சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் ஜாக்குலின் பயண வீடியோ ஒளிபரப்பாக இருக்கிறது. அதோடு ஜாக்குலின் பற்றி விஜய் சேதுபதி என்ன சொன்னார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய இருக்கிறது. 100 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 24 பேர் (வைல்ட் கார்டு போட்டியாளர்களையும் சேர்த்து) இருந்தனர். இறுதியாக ஐந்து போட்டியாளர்கள் மட்டும் பைனலிஸ்டாக தேர்வாகி இருக்கிறார்கள்.

bigg boss tamil bigg boss tamil 8 8

கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்காக நேற்று மதியம் வரை சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் முதல் பாகத்தில் ஒளிபரப்பாகும். அதுபோல இன்று மூன்று மணிக்கு மீண்டும் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. அதுதான் பைனலாக இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.

அதுபோல இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் ஃபைனலிஸ்டாக தேர்வாகி இருந்தனர். அதில் பணப்பெட்டி டாஸ்க்கில் ஜாக்குலின் இரண்டு நொடி தாமதத்தால் எவிக்ஷன் செய்யப்பட்டு இருந்தார். ஜாக்குலின் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய வெளியேற்றம் அவரை விடவும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.

இந்த நிலையில் இன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்காக நேற்று நடந்த சூட்டிங்கில் ஜாக்குலினுக்கு பயண வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதாம். ஜாக்குலின் நேரடியாக பிக் பாஸ் மூலமாக எவிக்ஷன் செய்யப்பட்டு இருந்ததால் இன்று மேடையில் முதலில் விஜய் சேதுபதி முன்பு ஜாக்குலின் பேச இருக்கிறாராம்.

அப்போது உங்களுடைய எவிக்ஷன் நான் எதிர்பார்க்காதது என்று விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். ஜாக்குலின் பெயரை சொன்னதும் அங்கு இருந்த பார்வையாளர்கள் எல்லோரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும் நான் உங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் உங்களை எவிக்ஷன் செய்ய விட்டிருக்க மாட்டேன்.

நீங்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது மக்களின் ஆசை மட்டும் அல்ல என்னுடைய ஆசையும் தான் என்று சொன்னதும் ஜாக்குலின் மேடையில் கதறி அழுது இருக்கிறார். நான் இந்த ஒரு மூவ்மெண்டுக்காக தான் காத்திருந்தேன். நான் என்னதான் செய்தாலும் எல்லோரும் ஓகே என்று சொல்கிறார்களே தவிர என்னுடைய திறமையை பாராட்டியது கிடையாது.

ஆனால் இன்று இந்த மேடையில் உங்களுடைய பாராட்டு மற்றும் மக்கள் எனக்கு தரும் கைத்தட்டல் பார்க்கும்போது நான் ஏதோ செய்திருக்கிறேன் என்று எனக்கு தெரிகிறது. இதுவே நான் செய்த பெரிய சாதனையாக நினைக்கிறேன் என்று கண்கலங்கி ஜாக்குலின் கூறினாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+