ஐயோ! விக்ரமனுக்கு என்ன ஆச்சு!? கதறி அழும் போட்டியாளர்கள்.. இந்த வாரம் வெளியேறுவது இவர்தானாம்!?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் வெளியான முதல் பிரமோவில் விக்ரமன் நிலைமையை பார்த்து சக போட்டியாளர்கள் கதறி அழுகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிவி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு டிவி சேனலாக போட்டி போட்டு வருகின்றனர் .
இந்த டிவி அந்த டிவி என இரண்டு டிவி சேனல்களுக்கு இடையே போட்டியாளர்களுக்குள் வாக்குவாதங்களும், பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்த வாரம் தொடங்கிய டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை கூட்டுவதற்காகவும் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவதற்காகவும் புதுப்புது டாஸ்க்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும், இது ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து வருவது போல தான் இந்த சீசனிலும் தற்போது டிவி சேனல் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் முழுக்க இந்த டாஸ்க் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் பிக் பாஸ் எதிர்பார்த்தபடியே சண்டை சச்சரவுகள் கலைகட்டி இருந்தது. கடைசியில் கமல் முன்னிலையில் தீர்ப்பு குறும்படத்தோடு வழங்கப்பட்டது.

விக்ரமனின் வித்தியாசமான நடிப்பு
இந்த நிலையில் இன்று முதல் ப்ரோமோவில் ரசிகர்கள் ஆரம்பத்தில் என்ஜாய் செய்கின்ற மாதிரி பல நிகழ்ச்சிகளை வைத்திருக்கின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் விக்ரமனின் பர்பாமன்சை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர். அவருடைய நடிப்பை பார்த்ததும் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. உடல் எல்லாம் சாப்பாட்டு கழிவுகளை பூசிக்கொண்டு தரையில் படுத்து இருக்கும் விக்கிரமனை பார்த்து ரட்சிதா கதறி அழுததை பார்த்ததும் பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

கலகலப்பாக மாறிய பிக் பாஸ் வீடு
ப்ரோமோவில் ஆரம்பத்தில் இது அந்த டிவி வழங்கும் பிபி டேலண்ட் ஷோ என்று ஆயிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மாடல் உடையில் ஆயிஷாவை பார்த்ததும் இவர் இன்று நல்ல பெர்பார்மன்சில் இருக்கிறார் போல என்று பார்ப்பவர்களுக்கு சொல்லத் தோன்றும் அளவில் இவர் என்று டாஸ்க்கில் தன்னுடைய திறமையை காட்டிக்கொண்டிருக்கிறார். அதில் ஜனனி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து குயின்ஸி பாடி கொண்டிருக்கிறார். ஷிவின் மற்றும் செரீனா இருவரும் ராம் வாக் நடை நடந்து போட்டியாளர்களை மெய்சிலிர்க்க வைத்து ரசிகர்களையும் மிரட்டி இருக்கின்றனர்.

மிரட்டிய கதிர் வெளியேறும் செரினா
அந்த டிவியை தொடர்ந்து இந்த டிவியில் இருந்து அமுதவாணன் நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார். ஓடினான் ஓடினான் வாழ்க்கையில் எல்லை வரை ஓடினான் என்று அவர் தன்னுடைய காமெடியை செய்து கொண்டிருக்கிறார்.
இவர்களுடைய பர்பாமென்ஸ் எல்லாம் அமைதியாக உட்கார்ந்து பார்த்து ரசித்து வந்த விக்ரமன் கடைசியாக கொடுத்த பர்பாமன்ஸ் தான் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதில் விக்ரமன் செப்டிக் டேங்க் கிளீன் செய்வது போல கெட்டப் போட்டு அதில் இறந்தவர் போல படுத்து இருக்கிறார் அவரை பார்த்து கதறி அழும் ரட்சிதா மகாலட்சுமியின் பெர்பாமன்ஸ் அடடா என்று சொல்லும் வகையில் இருக்கிறது. கடந்த வாரம் கமல் கைகளாலே மலக்குழியை அல்லும் பணியாளர்களின் அவலங்களை குறித்து பேசியதால் இந்த கண்டென்ட் எடுத்திருக்கிறார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் செரினா என்னதான் ஆட்டம் போட்டாலும் அவர் இந்த வாராம் வெளியேறப் போவது உறுதி என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications