டார்கெட் செய்யப்படும் இரண்டு போட்டியாளர்கள்.. எதிர்பார்க்காத நாமினேஷன்..இந்த முறை வெளியேறுபவர் இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் செய்வதற்காக நாமினேஷன் நடைபெற்று வருகிறது.

இந்த வார போட்டியாளர்கள் பலரும் தனலட்சுமி மற்றும் ஜனனியை டார்கெட் செய்து எலிமினேஷன் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ரசிகர்கள் சிலர் தனலட்சுமி மீது கோபத்தில் இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களும் அவருடைய பெயரை அதிகமாக நாமினேஷன் செய்து வருவதால் இவர்தான் இந்த வாரம் வெளியேறுவாரா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த வார நாமினேஷன்

இந்த வார நாமினேஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் 36 ஆவது நாளான இன்று இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவதற்காக போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்து வருகின்றனர். அதில் பலர் ஜனனி மற்றும் தனலட்சுமியை நாமினேஷன் செய்திருக்கின்றனர். ஒரு சிலர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முறை நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் பெயரையும் கூறி இருக்கின்றனர். கடந்த இரண்டு மூன்று வருட வாரங்களாக இவர்களுடைய பெயர் எலிமினேஷன் லிஸ்டில் வராததால் இந்த முறை இவர்களுடைய பெயரும் வந்திருக்கிறது.

இந்த முறை யாராக இருக்கும்

இந்த முறை யாராக இருக்கும்

சக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு பொறுத்து தான் அவர்கள் இந்த வாரம் சேவ்ஆக முடியும். ஏற்கனவே சனி மற்றும் ஞாயிறு இரண்டு தினங்களுமே தனலட்சுமிக்கு அதிகமாக கமல் கண்டிப்பு கிடைத்திருக்கிறது. இதனால் இவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார் அல்லது நிவாஷினி வெளியேற வாய்ப்பு இருக்கிறதா என்றும் சிலர் குழப்பத்தோடு இருக்கின்றனர். ஏற்கனவே போட்டியாளர்கள் பலரும் நிவாஸினி பெரிய அளவில் பர்பாமன்ஸ் பண்ணவில்லை என்று சொன்ன காரணத்தினால் இந்த வாரம் அதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

இந்த முறையும் அசீன் இருக்கார்

இந்த முறையும் அசீன் இருக்கார்

ஜனனி ஆரம்பத்தில் இருந்தே குழந்தைத்தனமாக இருக்கிறார் அனைவருக்கும் இவரை பிடித்து விடுகிறது என்று பல போட்டியாளர்கள் இவர் மீது காண்டில் இருந்த நிலையில் இந்த வாரம் ஜனனியின் பெயரை பலரும் கூறியிருக்கின்றனர் .ராபர்ட் மாஸ்டர் உடைய பெயரை விக்ரமன் நாமினேஷன் செய்திருக்கிறார். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறதாக நான் நினைக்கிறேன் என்று விக்ரமன் கூறி இருக்கிறார். அதுபோல ஏடிகே, ராம், அசீம் போன்றோர் நிவாஷினி பெயரின் நாமினேஷன் செய்திருக்கின்றனர். ஆயிஷா, குயின்சி போன்றோர் ஜனனியை நாமினேஷன் செய்திருக்கின்றனர் .அதுபோல மைனா நந்தினி, குயின்சி போன்றோர் அசீம் பெயரை நாமினேஷன் செய்து இருக்கின்றனர்.

அது இருவரில் ஒருவர்தான்

அது இருவரில் ஒருவர்தான்

அதுபோல மைனா நந்தினி, அமுதவாணன், கதிரவன், மணிகண்டன் போன்றோர் கடந்த வாரம் கொஞ்சம் அதிகமாக முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறி தனலட்சுமியை நாமினேஷன் செய்கின்றனர். இப்போதைய நிலவரப்படி தனலட்சுமி,நிவாஷினி, ஜனனி மூன்று போட்டியாளர்களும் இந்த வார எலிமினேஷனில் வீக்காக இருக்கின்றனர். இதில் ஜனனிக்கு எப்படியும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருப்பதால் அவரை அவருடைய ரசிகர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள் ஆனால் நிவாஷினி அல்லது தனலட்சுமி தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் அடித்து கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+