என் மகள் பிக் பாஸ்க்குள் செய்தது, தப்பு தான்! ஷெரினாவை பற்றி அவருடைய அப்பா கூறிய ரகசியங்கள்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஷெரினாவை பற்றி அவருடைய அப்பா பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ஷெரினா தன்னுடைய முடிவில் தெளிவாக இருப்பார். ஆனால் அவரைப் பற்றி தவறாக பல மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது. அது பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அப்பா கூறிய உண்மை
கடந்த வாரம் ஷெரினா, நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அடிப்பட்டதை குறித்து வெளியான மீம்ஸுகளுக்கு பதில் சொல்லும் விதமாக ஷெரினாவின் அப்பா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஷெரினா பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்டது தப்புதான். விளையாட்டு என்றால் அடிபட தான் செய்யும், அப்படியே அடிபட்டால் அதை தட்டி விட்டு விட்டு கமல் சொன்ன மாதிரி யாரும் பார்க்காத வண்ணம் போய்விட வேண்டும். அதை விட்டுவிட்டு வலிக்கிறதே என்று தன்னுடைய விளையாட்டை விட்டு விடக்கூடாது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஷெரினாவை பற்றி பல தகவல்களையும் கூறியிருக்கிறார்.

மனசுக்கு கஷ்டமாக இருக்கு
ஷெரினா வீட்டிற்கு செல்ல பிள்ளையாக இருந்தாலும் அவர் எடுக்கும் முடிவுகள் நியாயமானதாகவும், சரியானதாகவும் இருக்கும் என்று அவருடைய தந்தை கூறியிருக்கிறார். ஷெரினாவின் முடிவில் தான் கூட தலையிட முடியாது அதனால் அவரைப் பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் பேசியது எல்லாமே பொய் தான். ஷெரினாவை யாராலும் மனதை மாற்ற முடியாது. பொம்மை டாஸ்கில் அசீமின் பேச்சை கேட்டு நடந்து கொண்டார் என்று சொல்வது எல்லாமே நம்புற மாதிரி இல்லை. ஷெரினா தன்னுடைய முடிவில் தெளிவாக இருப்பார். ஆனால் அவரைப் பற்றி தவறாக பல மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது. அது பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

மனிதாபிமானம் இருக்கு
ஷெரினா வீட்டில் இருப்பது போலத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருக்கிறார். அவர் எந்த இடத்திலும் நடிக்கவே இல்லை. ஷெரினாவிற்கு இரக்க குணம் அதிகமாக உண்டு. ஒருமுறை நாங்கள் பெங்களூரில் இருந்து வரும்போது ஒருவர் ரோட்டில் அடிபட்டுக்கு இருந்த நேரத்தில் யாரும் பக்கத்தில் செல்லாமல் இருந்தபோது ஷெரினா தான் ஓடி சென்று அவரை தூக்கி மருத்துவமனையில் சேர்ப்பது வரைக்கும் பல உதவிகளை செய்து வந்தார்.ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் எந்த வேலையும் செய்யவில்லை யாரிடமும் மனிதாபி முகத்தோடு நடக்கவில்லை என்றெல்லாம் அவளைப் பற்றி செய்திகள் வரும்போது கவலையாக இருக்கிறது.

அந்த வார்த்தை ஆறுதல் கொடுத்தது
அதுவும் தலையில் அடிபட்டு விட்டது என்று ஷெரினா சொன்னது பொய் அவர் நடிக்கிறார் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து மீம்ஸிகளை வெளியிட்டு வந்தனர். அது வேதனையாக இருந்தது .அப்படி நடிக்கிற ஆள் கிடையாது ஷெரினா. அதற்குப் பிறகு உள்ளே இருக்கும் மகேஸ்வரி தலையில் அடிபட்டு இருந்தது உண்மைதான், தலையில் வீங்கி இருந்தது. நாங்கள் தான் ஐஸ் கியூப் வைத்து ஒத்தடம் கொடுத்தோம் என்று சொன்ன பிறகுதான் அதை பலரும் நம்பத் தொடங்கினர். எங்களுக்கும் அதற்கு பிறகு தான் மன நிறைவு அடைந்தது என்று கூறியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications