கேம் விளையாட வந்தீங்களா..ஆக்கி திங்க வந்தீங்களா?? சரமாரியாக கேள்வி கேட்ட பாலா..காரணம் இதுதானா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை பற்றி பாலா பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே பாலா யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார் என்ற ஒரு பேச்சு இருக்கும் நிலையில் தற்போது பேசிய பேச்சு அதை நிரூபிக்கும் வகையில் தான் இருக்கிறது.

பரிச்சயமான போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சுவாரசியம் மட்டுமல்லாமல் விறுவிறுப்பும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இந்த நிகழ்ச்சியும் இருந்தாலும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஏற்கனவே பலருக்கும் பரிச்சயமானவர்கள் ஆக இருப்பதால் இங்கே சண்டை சச்சரவுகளுக்கும் கலவரங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த விளையாட்டை பற்றி நன்றாக புரிந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களுடைய பர்பாமன்ஸை ஹெவியாக காட்டி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பிக்பாஸ் அல்டிமேட் இந்நகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இதில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த போட்டியாளர்களின் ஒருவரான பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்ட பாலாவும் ஆவர். இவருடைய கெத்தான கேரக்டரை பிடித்துப்போனதால் தான் பாலாஜி முருகதாஸை ரசிகர்கள் நான்காவது சீசனில் ரன்னராக ஜெயிக்க வைத்தனர். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இவர் டைட்டில் ஜெயிக்கவில்லையே என்று ஃபீல் செய்துவந்தனர். இந்த நிலையில் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் தான் வெற்றி பெறுவார் என்று தற்போது ரசிகர்கள் பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

நான்காவது சீசனில் ரன்னர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினமும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் யார் மீதும் அதிகமாக அன்பு பாசம் என்று அடிமையாகாமல் பாலாஜி இருந்து வருகிறார் .இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் பிராங்க் செய்கிறேன் என்று அனைத்து போட்டியாளர்களும் பாடாய் படுத்தி விட்டார். பிக்பாஸ் சொன்னதாக பாலா சொன்ன வார்த்தையை நம்பி போட்டியாளர்களும இந்த வீட்டிற்குள் யாரை இரண்டு பேரை எலிமினேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர் யாராக இருப்பார்கள் அதற்குரிய காரணம் என்ற என்று அனைவரும் கூறிவந்தனர். அனைவரையும் பேச விட்டு கடைசியில் பாலாஜி இது பிக்பாஸ் சொல்லவில்லை நானாக சொன்னது என்று ஷாக் கொடுத்துவிட்டார்.

பாலாவின் ப்ராங்க்
பிக் பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே வனிதாவுக்கும் பாலாஜிக்கும் பிரச்சனைகள் முட்டிக் கொண்டிருக்கும் போது, இன்று பாலாஜி பிராங்க் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் வீட்டின் தலைவராக இருக்கும் என்னிடம் நீ சொல்லிவிட்டு பிராங்க் செய்யவேண்டும் என்று வனிதா கூறிக் கொண்டிருக்கிறார். வீட்டின் தலைவர் என்றால் அதற்காக எல்லாமே உங்க கிட்ட சொல்லிகிட்டு தான் செய்யணுமா என்று எதிர்கேள்வி கேட்டார் பாலாஜி. நீங்க எல்லாம் கேம் விளையாட தான் வந்தீங்களா?? இல்ல ஆக்கி சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக நீங்க வந்தீங்களா??என்று அனைத்து போட்டியாளர்களும் வார்த்தைகளால் விளாசி எடுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் எங்கள் மனதில் நினைப்பதை அப்படியே பாலா கேட்டு விட்டார் என்று கூறி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications