ஓப்பனா முகத்துல மார்க் போட்ட போட்டியாளர்கள்...அவர்கிட்ட மட்டும் யாரும் போகலையே.. அவ்ளோ பயமா??
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டுள்ளது.
முகத்தில் மார்க் போட்டு போட்டியாளர்கள் நாமினேசன் செய்து வருகின்றனர்.

ஓப்பன் நாமினேஷன்
தற்போது வெற்றிகரமாக எட்டாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திலேயே ஓபன் நாமினேஷன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இவ்வளவு விரைவில் இந்த சீசனில் ஓபன் நாமினேஷன் தொடங்கியிருக்கின்றனர். இதனால் போட்டியாளர்களுக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக கண்டென்ட் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் என்று பிக்பாஸ் பக்காவா ப்ளான் போட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

முகத்தில் குத்தப்படும் மார்க்
போட்டியாளர்கள் தாங்கள் யாரை நாமினேஷன் செய்கிறார்களோ அவர்களின் முகத்தில் மார்க் போட்டு தங்களுடைய வெறுப்பை காட்டி வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது எத்தனை பேர் என் முகத்திலேயே மார்க்கு போட்டுட்டியா என்று கங்கணம் கட்டிக் கொண்டு சண்டையை தொடங்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே நாட்டிலும் தேர்தல் சூடு பிடித்து கொண்டிருக்கும் நேரத்தில் பிக்பாஸ் வீட்டிலும் நாமினேஷன் வேற லெவலில் நடந்து வருகிறது .

முதல் வார வெளியேற்றம்
ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது பிக்பாஸ் அல்டிமேட் விதியாக இருந்தாலும் முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று பல சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த வாரம் யார் வெளியே செல்ல போகிறார்களோ என்று இப்போதே ஆர்வம் தொடங்கி இருக்கிறது. அதுவும் அளவுக்கு அதிகமான போட்டியாளர்கள் ஜூலியை டார்கெட் செய்து வருவதை பார்க்க முடிகிறது. என்றும் ஜூலியின் ரசிகர்கள், ஜூலி மீதுதான் போட்டியாளர்களுக்கு கடும் கடுப்பு போல என்று கூறி வருகிறார்கள்.

அவ்வளவு பயமா
ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் வனிதாவிடம் பேசுவதற்கு போட்டியாளர்கள் பயப்பட்டு கொண்டிருக்கும்போது ஓபன் நாமினேஷனில் அவருடைய பெயரை அதிகமானோர் எடுக்க மாட்டார்கள். அவ்வளவு பயம் அவர் மீது என்று ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள். இந்த மாதிரி தான் போட்டியாளர்களும் அந்த அளவிற்கு வனிதாவின் பெயரை பயன்படுத்தியது போல ப்ரோமோவில் தெரியவில்லை. அதனால் இந்த வாரம் வனிதாவின் பெயர் எலிமினேஷனில் வராது என்று பலர் கூறிவருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications