பிக்பாஸ் அல்டிமேட் :வந்துட்டேன்னு சொல்லு..மீண்டும் களமிறங்கும் அபிநய்..திறமையை நிரூபிப்பாரா
சென்னை: ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் போட்டியாளராக அறிமுகமாகிறாராம்.
இதுவரைக்கும் அபிநய்க்கு ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் தற்போது மீண்டும் இவருடைய என்ட்ரிக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான அபிநய் தற்போது மீண்டும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் தற்போது பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினரும் இதைப் பற்றி தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அல்டிமேட்டில் அறிமுகமாகும் அபிநய்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மீண்டும் கமல் தான் இதில் கலந்து கொள்ள போகிறார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஏறகனவே ஒளிபரப்பான சீசன்களில் கலந்து கொண்டவர்கள் தான் என்பது பற்றி கமல் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு சில புது போட்டியாளர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதுவும் கடைசி சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒரு சிலர் மீண்டும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதில் ஒருவராக அபிநய் இருந்து வருகிறார்.

இழந்த பெயர் கிடைக்குமா?
அபிநய் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும், நெட்டிசன்கள் வழக்கம்போல சமூக வலைத்தளத்தில் அதிகமான கமெண்டுகளை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே பிக்பாஸில் ஐந்தாவது சீசனில் இவருடைய ஒரு சில செயல்கள் பலருடைய அதிருப்தியை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் பரவி வருகிறது. அதனால் மீண்டும் இதில் கலந்து கொள்ள வேண்டுமா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே இவரால் இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருக்க முடிந்ததால் தன்னுடைய இழந்த பெயரை இந்த நிகழ்ச்சியில் சரிசெய்து விடுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களால் பகிரப்படும் செய்தி
ஏற்கனவே பல சீசன்களிலும் கலந்து கொண்டு தங்களுடைய பெயரையும் புகழையும் இழந்தவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவது சீசனில் சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் சொந்தக்காரராக இருந்த அபிநய் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவது தன்னுடைய கேரக்டரை தெளிவாக வெளி காட்டுவார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் அவருடைய தரப்பிலிருந்து இதைப்பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications