பிக்பாஸ் அல்டிமேட்: இறுதியாக கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்... 14 பேருமே வேற லெவல் தான்
சென்னை: ஜனவரி 30ஆம் தேதி தொடங்கவிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் களமிறங்க இருக்கின்றனர்.

விரைவில் அல்டிமேட் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு பரிமாணம் தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இருந்தாலும், இதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் மட்டுமே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இந்த அல்டிமேட் இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுபோல போட்டியாளர்கள் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களில் கலந்து கொண்டவர்கள் தான் என்பது கூடுதல் ஒரு சிறப்பு.

ஒரு நாள் தானே இருக்கு
இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் வழக்கம்போல கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். ஆனால் அவர் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் தன்னுடைய பஞ்சாயத்தை தொடங்குவார் மற்ற நாட்களில் 24 மணிநேரமும் போட்டியாளர்களே அவர்களுடைய வேலையை சரியாக செய்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து அதிகமான போட்டியாளர்களின் பெயர்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது இறுதியாக கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இறுதிகட்ட போட்டியாளர்கள் விவரம்
இந்த நிகழ்ச்சியில் வயதில் மூத்தவராக சுரேஷ் சக்கரவர்த்தி கலந்து கொள்ள இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அபிநய், வனிதா, பாலாஜி, ஜூலி, சுருதி, சுஜா, அனிதா சம்பத், தாமரைச்செல்வி, சாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி இவர்கள் 14 போட்டியாளர்களும் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாக இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் அறிமுக நிகழ்ச்சி போலத்தான் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியிலும் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஆர்வம் அதிகரித்து இருக்கிறதாம்
இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் ஒருசில போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வமான தகவல் ப்ரமோவாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள போட்டியாளர்களின் விவரங்களும் விரைவில் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தங்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் மனதை கவர்ந்த போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொள்வதால் என்ன தான் இருக்கப் போகிறது என்று ஒரு கை பார்த்துவிடுவோம் என்று பல ரசிகர்கள் இப்போதே ஹாட்ஸ்டார் டவுன்லோட் செய்து இருக்கிறார்களாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications