பிக்பாஸ் அல்டிமேட்: கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட விதிமுறைகள்.. இதுவும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றப்பட்டதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் வெற்றிகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஐந்தாம் சீசன்கள் வரை வெற்றியாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு போலவே டிஆர்பியும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது பிற சீரியல்கள் மற்றும் பிற ரியாலிட்டி ஷோக்களில் டி ஆர் பி குறைந்து போய்விடுகிறது. அந்த அளவிற்கு ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பலர் திட்டி தீர்த்து வந்தாலும், மறுபக்கம் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

ஹாட்ஸ்டாரில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் புதுவிதமாக பிக் பாஸ் அல்டிமேட் என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதில் ஏற்கனவே ஒவ்வொரு சீசனிலும் கலந்துகொண்ட ரசிகர்களின் மனதைக் கவர்ந்த போட்டியாளர்கள் ஒரு சிலரை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிரட்டிய போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் களம் இறங்குவதால் இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் கிராண்ட் ஃபினாலேவில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி கமல் விவரித்துக் கூறியதும் ரசிகர்கள் இதைப் பற்றி பேச தொடங்கி விட்டார்கள்.

போட்டியாளர்களின் அறிமுகம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் களமிறங்கியிருக்கிறார். அதை அவரே கூறியுள்ள நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் மட்டும் வந்து தன்னுடைய வாத்தியார் வேலையை பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று போட்டியாளர்களின் உறுதியான பெயர்களை பிக்பாஸ் அல்டிமேட் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென்று தற்போது இந்த நிகழ்ச்சிக்கான மாற்றங்கள் வெளியாகியுள்ளது.

புதிய மாற்றமா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று கூறிவந்தது. இதைத்தான் கமலும் கூறியிருந்தார். ஆனால் தற்போது வரும் ஜனவரி 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகிறது என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் வலம் வருகிறது. தினமும் இரவு 9 மணிக்கு எனும் வார்த்தையை கேட்டு ரசிகர்கள் பலர் அப்போ இதுவும் ஒரு மணி நேரம் தான் இருக்குமா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே முப்பதாம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்க போகிறது என்று ப்ரமோக்கள் வலம் வரும் நேரத்தில் இந்த ஒரு புது அறிவிப்பு பலருக்கும் குழப்பத்தை கொடுத்து இருந்தாலும், ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பினால் தங்களுக்கும் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications