வனிதா செஞ்சா மட்டும் தப்பா??.. ரவீந்திரனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்திரனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு வனிதாவை பற்றி பேசிய ரவீந்தர் இப்போது செய்தது சரியா? ? என தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ரவீந்திரருக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்களும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திடீர் திருமணம்
லிப்ரா புரொடக்ஷன் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பிரபலமான நபராக இருந்து வருகிறார். திரை துறையில் மட்டுமல்லாமல் ரவீந்தர் சில youtube சேனல்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி ரிவ்யூ செய்து வருகிறார். தற்போது அவர் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இவருடைய திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பல்வேறு தரப்பட்டவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ரவீந்தர் பேசியதை வைத்து தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

காரசாரமான கருத்துக்கள்
சினிமாக்களில் நடித்திருந்தாலும் பிக்பிக் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருடைய திருமணத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதில் ஒருவராக ரவீந்தரும் இருந்து வந்தார். பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பதாலும் அவருக்கு எலிசபெத் என்ற ஒரு மனைவியும் மகனும் இருக்கும் நிலையில் பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத்துக்கு ஆதரவாக வனிதாவை சமூக வலைத்தளத்தில் அதிகமாக திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு குழந்தையும் மனைவியும் இருக்கும்போது எப்படி வனிதா திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் அப்போது காரசாரமாக பேசியதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
வனிதாவோடு ரவீந்தர் சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்களை செய்து வந்தார். இது வனிதாவின் ரசிகர்களுக்கு வெறுப்பை கொடுத்து இருந்தது போல அதனால் தான் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் தற்போது ரவீந்திரரை கலாய்த்து வருகின்றனர். தற்போது ரவீந்திரன் ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கும் நடிகையை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? அந்த மகனின் வாழ்க்கை என்னாகும் என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். ஆனால் ரவீந்திரனின் ரசிகர்கள் மகாலட்சுமி ஏற்கனவே விவாகரத்து ஆனவர் தானே அவர் பல வருடங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரை திருமணம் செய்ததில் எந்த தவறு என்று பதில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

முதல் நாளிலே இப்படியா
என்னதான் ரவீந்திரரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்தாலும் தற்போது போட்டி போட்டுக் கொண்டு வனிதாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சில நெட்டிசன்கள் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல..தனக்கு என்று வந்துவிட்டால் அது நியாயம், தர்மமாக மாறிவிடும்... என்றெல்லாம் பழமொழிகளை பேசி ரவீந்திரனை வம்பு இழுத்து வருகின்றனர். ஒரு சிலர் திருமணம் முடிந்த முதல் நாளிலேயே இப்படியா?? மனதை காயப்படுத்துவது என ரவீந்திரதற்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications