விட்டுறாதீங்க அப்பு விட்டுறாதீங்க... கை கட்டுப்போட்டு கலவரப்படுத்திய பிக் பாஸ்
சென்னை: கையிற்றை கையில் பிடித்தபடி புது டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை மிரட்டி விட்டது பிக்பாஸ்.
இந்த வாரம் தலைவர் பதவிக்கான போட்டிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கயிற்றை விடாமல் பிடித்து தலைவர் பதவியை ஜெயிக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கான டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தலைவர் பதவிக்காக பல போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும். அதுவும் நிகழ்ச்சி முடிய போகும் தருவாயில் இருப்பதால் தற்போது போட்டிகள் அனைத்துமே டஃப்பாக மாறிவிட்டது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய திறமையை காட்டிவிட வேண்டும் என்று துடிப்பாகவும் பயத்தோடும் விளையாடி வருகின்றனர். எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்பதுதன் அனைவருடைய விருப்பமாக இருந்தாலும் இவர்களின் நம்பிக்கையை முறியடிக்கின்ற மாதிரி பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ஜாலியான டாஸ்க் தான்
இந்த வார தலைவர் பதவிக்காக விட்ராதீங்க அப்பு விட்ராதீங்க என்று சொல்கின்ற மாதிரி தலைப்போடு கயிற்றை கையில் பிடித்தபடி போட்டியாளர்கள் அனைவரும் நாள் முழுக்க தங்களுடைய அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுத்துள்ளது. கயிற்றை விட்டு கையை எடுக்கும் போட்டியாளர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்பது விதியாக இருந்து வருகிறது. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்றால் பரவாயில்லை ஒரு நாள் முழுக்க அனைத்து போட்டியாளர்களும் ஒரு கயிற்றோடு சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

ரசிகர்களின் கேள்வி
இந்த மாதிரியே மனது மற்றும் உடல் சம்பந்தப்பட்ட விளையாட்டைத் தான் நாங்களும் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இந்த டாஸ்கை பார்த்து கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்படி ஒரு நாள் முழுக்க கயிற்றை பிடித்துக் கொண்டு இருக்க முடியும் தூங்கும் போதும் கயிற்றை விட்டு விலகக் கூடாது என்று கூறியிருப்பதால் பலர் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக எப்படியும் விளையாட்டை விட்டு வெளியேறி தானே ஆகவேண்டும் என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

டாஸ்க்கில் ஏற்பட்ட பிரச்சனை
போட்டிகள் என்றாலே அதில் பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் சுவாரசியம் இருக்காது என்று சொல்வது போல இந்த டாஸ்க்கிலும் பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் பிரச்சனையை தொடங்கி விட்டார்கள். இவர்கள் இருவரும் நிஜமாகவே சண்டை போடுகிறார்களா அல்லது டாஸ்க்காக இப்படி செய்கிறார்களா??என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். என்ன இருந்தாலும் பிரியங்கா செய்வது நியாயம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் பிரியங்காவுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது, நிரூப் தான் எப்போதும் நெருப்பு என்று ஒருசில ரசிகர்கள் இருக்கும் நெருப்பு இமோஜிகளை அனுப்பி வருகின்றனர். இந்த வார தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications