செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னாவ் வெளியிட்ட பதிவு..கடுப்பான ரசிகர்கள் வெளியிட்ட கருத்துக்கள்!!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்னாவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது அவரைப் பற்றி அவருடைய மனைவி பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருக்கும் நேரத்தில் ரசிகர்கள் ஒரு சிலர் அர்னாவ் போஸ்ட்க்கு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஒரு சில நாட்கள் ஆகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான போஸ்ட்களை தான் அர்னாவ் வெளியிட்டு வந்தார். அது தற்போது இதற்காகத்தானா? என்று சிலர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

அர்னாவ் மனைவி குற்றச்சாட்டு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனை குறித்து அவருடைய மனைவி தற்போது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் அவரைப் பற்றி அர்னாவ்வின் மனைவியான திவ்யா பேசிய வீடியோக்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மதம் மாறி திருமணம் செய்த தன்னை தவிக்க விட்டு விட்டு அர்னாவ்வோடு சீரியலில் நடிக்கும் வேறு ஒரு நடிகையுடன் பழகி வருவதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது திவ்யா கர்ப்பமாகவும் இருந்து வருகிறார். அதனால் தன்னுடைய கணவர் அடித்ததால் வயிறு வலியோடு நடிகை திவ்யா மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஆதாரம்
திவ்யாவின் குற்ற சாட்டுகளை மறுத்த அர்னாவ் தன்னுடைய மனைவி கூறுவது பொய் என்றும் அவரை அடித்தேன் என்று சொன்ன நேரத்தில் நான் அவரோடு இல்லவே இல்லை. அதற்கான ஆதாரத்தை நான் தருவதாகவும் கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே திவ்யாவுக்கு திருமணம் முடிந்திருந்தது. அதைப்பற்றி என்னிடம் கூறியிருந்தார். ஆனால் நாங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போதும் அவர் விவாகரத்து வாங்காமல் தான் இருந்து வந்துள்ளார். அதைப்பற்றி என்னிடம் கூறவே இல்லை. அவருக்கு குழந்தை இருப்பது எனக்கு ஆரம்பத்தில் தெரியாது என்றும் இவரும் பதில் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் பதிவுகள்
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு அர்னாவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒரு சிலர் அர்னாவ்வை திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அதுபோல திவ்யா ஸ்ரீதரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏதோ உற்சாகமாக வருகிறது விரைவில் என்று போஸ்ட் வெளியிட்டிருந்தார். அப்போது ரசிகர்கள் யாருக்கும் என்ன என்று தெரியவில்லை என்றாலும் தற்போது இவரைப் பற்றி பல செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இதைப் பற்றி தான் திவ்யா அப்படி சொல்லி இருப்பாரோ என்று அவருக்கும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சோகமான பதிவுகள்
திவ்யா ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் தனக்கு அர்னாவ்வுடன் திருமணம் நடைபெற்றதையும் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலமாக தெரியப்படுத்தி இருந்தார். தொடர்ந்து திவ்யா மகிழ்ச்சியாக அர்னாவ்வோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கேப்ஷன் கொடுத்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அதே நேரத்தில் அர்னாவ் சோகமான வீடியோக்களையும் அதற்கு கேப்ஷன்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் உங்கள் மனைவி சந்தோஷமாக போஸ்ட் பதிவிட்டு வருகிறார். நீங்கள் மட்டும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்விகளை எழுப்பி வந்தனர் .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications