ஜிபி முத்து பாடிய பாடல் வெளியானதும் இப்படி ஒரு வரவேற்பா?வாழ்த்து கூறிய பிரபலம்! ஆனால் அந்த வார்த்தை!
சென்னை: சமூக வலைதளங்களில் ஒரு கலக்கு கலக்கிய ஜி.பி முத்து தற்பொழுது பிக் பாஸ் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் அலப்பறை செய்து வருகிற நிலையில், அவர் பாடி நடித்து வெளிவந்துள்ள ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடனம் அமைத்து இயக்கியுள்ள இந்த ஆல்பம் வெற்றி பெற ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை பிக் பாஸ் புகழ் கவின் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆல்பம்
ஏற்கனவே குடியைப் பற்றி 'வாந்தி.. வாந்தி..' ஆல்பம் பாடலை எழுதி இசையமைத்திருந்த இசையமைப்பாளர் வைசாக் அவர்களே இந்த பாடலையும் எழுதி இசை அமைத்திருக்கிறார். "எதுவும் கிடைக்கலைன்னா" என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்தப் பாடல் திங்க் மியூசிக் இந்தியா வெளியிட்டுள்ளது. பிரபல நடன இயக்குனரும் முந்தைய பிக் பாஸ் சீசன் போட்டியாளருமான சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்து இயக்கி உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

டிக் டாக் டு பிக் பாஸ்
டிக் டாக் இல் பிரபலமாக இருந்த ஜி.பி முத்து டிக் டாக் முடக்கம் செய்த பிறகு தனியாக யூடியூப் சேனல் துவங்கி பெரும் ரசிகர்கள் ஆதரவுடன் சேனலை நடத்தி வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்த விஜய் டிவி இவரை அரும்பாடு பட்டு சம்மதிக்க வைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதிலிருந்து இவரும் தன் இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.

நச்சுன்னு இருக்கும் நக்கு பாட்டு
ஜி.பி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கான பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட மியூசிக் நிறுவனம் இந்த ஆல்பத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஜி.பி.முத்து தன் யூடியூப் சேனலில் நடத்திய நிகழ்ச்சிகளிலே அவரது லெட்டர் படிக்கும் சம்பவங்கள் தான் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெறும்.அப்படி அவர் லெட்டர் படிக்கும் பொழுதெல்லாம் அடிக்கடி பயன்படுத்துகிற வார்த்தை தான் "நக்கு" அந்த வார்த்தையை மட்டும் வைத்து ஜி.பி முத்துவை இந்த பாடலில் பாடி நடிக்க வைத்துள்ளனர்.

கவின் ஆதரவை பெற்ற ஜி பி முத்து
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இந்த பாடல்களை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா வெளியிட்டுள்ளார்.சாண்டி மாஸ்டரின் சக பிக் பாஸ் போட்டியாளரும் நெருங்கிய நண்பருமான கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு பாடல் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.அதோடு மட்டுமின்றி ஜிபி முத்துவிற்கும் வாழ்த்துக்களையும் கவின் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications