எளிமையான தேவதையாக ஜொலிக்கும் தர்ஷா....ஏக்கத்தோடு தவிக்கும் ரசிகர்கள்
சென்னை: ஏங்க வைக்கும் அழகை எளிமையாய் காட்டிய தர்ஷாவை பார்த்ததும் ரசிகர்கள் வார்த்தை இன்றி தவிக்கிறார்கள்.
Recommended Video
எடுப்பாய் மிடுக்காய் உடையணிந்து கண்களாலே ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் தர்ஷாவை பார்த்ததும் இன்ஸ்டாகிராமே கலகலத்துப் போய் இருக்கிறது.
இந்த மாதிரி பார்த்து எத்தனை நாளாச்சு என்று அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

எளிமையாக இருந்தாலும் அள்ளுதே
சிம்பிளாக உடை அணிந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் மொத்த அழகையும் சிரிப்பில் காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் தர்ஷாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் விழி அசைக்க மறந்துபோய் பார்த்த வண்ணமே இருக்கிறார்களாம். எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத பேரழகியாக இவருடைய எளிமையான அழகை பார்த்த ரசிகர்களால் கமெண்ட் பாக்ஸ் நிறைந்து வருகிறது. தங்களுடைய மனதில் தோன்றும் கவிதைகளையும் காதல் வசனங்களையும் கமெண்டுகளில் அனுப்பி வருகின்றனர்.

இந்த அழகை எதிர்பார்க்கல
சும்மாவே இவர் போஸ்டுக்கு கன்னாபின்னாவென்று கற்பனை கவிதைகளை தட்டிவிடும் ரசிகர்கள் இந்த மஞ்சள் ப்ளூ உடைக்கு அதே வண்ணத்தில் ஹார்டின்களை பறக்க விட்டு வருகின்றனர். ரசிகர்கள் ஒரு பக்கம் ஹார்டின்களை பறக்க விடுகிறார்கள் என்றால் அதற்கு பதிலாக தர்ஷாவும் அதே வண்ணத்தில் மஞ்சள் ப்ளு கலரில் பறக்க விட்டு வருகிறார். அதுவும் ஒரு ரசிகர் "தேவதை எப்படி இருப்பாள் என்று கேட்பவர்களுக்கு உன்னைத்தான் அடையாளமாக காட்டி வருகிறேன்" என்று கவிதையை உதிர்த்து இருக்கிறார். அதில் அசந்து போன தர்ஷா அவருக்கு தன்னுடைய ஹாட்டின் களை பறக்க விட்டிருக்கிறார். இன்னொரு ரசிகர் 'யாரையும் இவ்வளவு அழகா பாக்கல உன்னைப்போல் எவளும் உசிரை தாக்கல' என்று திரைப்பட பாடலை கவிதையாக தட்டியிருக்கிறார்.

வேற லெவல் கேப்ஷன்
"உங்கள் சொந்த முன்னேற்றத்தில் இவ்வளவு நேரம் ஒதுக்குங்கள் வேறு எந்த தீமைக்கும் நேரமில்லை" என்று இவர் கேப்ஷன் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி இருப்பதைப் பார்த்ததும் பலர் வேற லெவல் கேப்ஷன் என்று கூறி வருகின்றனர். இதையே பலர் ஃபாலோ பண்ணுவதாகவும் கூறியிருக்கின்றனர். எப்படியோ ரசிகர்களுக்கு புத்துணர்வை மட்டுமல்லாமல் எனர்ஜியும் ஊட்டிக் கொண்டிருக்கும் தர்ஷாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. என்ன தான் பல நடிகைகள் முட்டிமுட்டி போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் இவருடைய இடத்திற்கு யாராலயும் வர முடியாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எப்போதும் செல்ல தலைவி தான்
சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்திருக்கும் தர்ஷா குப்தா, அவர் நடித்த முதல் திரைப்படம் வெளிவந்த நிலையில் மேலும் முகத்தில் மகிழ்ச்சியும் அழகும் கூடிப் போச்சு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முதல் திரைப்படம் இவர் எதிர்பார்க்காத வகையில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்னுடைய வேலை அதில் நடிப்பது அதை சிறப்பாக முடித்து விட்டேன் என்று மன திருப்தியோடு இவர் மீண்டும் தன்னுடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட வந்துவிட்டார். என்ன தான் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பிசியாக இருந்தாலும் ரசிகர்களுக்காக அடிக்கடி போஸ்ட் போடுவதை பார்த்ததும் ரசிகர்கள் எப்போதுமே எங்கள் செல்ல தலைவி நீங்கதான் என்று கொண்டாடி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications