குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய முதல் போட்டியாளர்... சோகத்தில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் முதல் எலிமினேஷன் நடந்துள்ளது.
நிகழ்ச்சி தொடங்கி தற்போது முதல் வெளியேற்றம் நடைபெற்று இருப்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் சோகத்தில இருக்கின்றனர்.

ரியாலிட்டி ஷோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களின் மத்தியில் தனி மதிப்பை பெற்று விடுகிறது. காரணம் டாஸ்க் என்கிற பெயரில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பல செயல்கள் இருப்பதால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்கத் தொடங்கி விடுகின்றனர். முதல் சீசன் வெற்றியடைந்தால் தொடர்ந்து இதில் பல சீசன்கள் தொடங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த சமையல் நிகழ்ச்சி வித்தியாசமாக இருப்பதால் பலரும் இதை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

போன வார நிலவரம்
குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியை தொடர்ந்து தற்போது சமீபத்தில் மூன்றாவது சீசன் ஆரம்பமானது. இதில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளார்கள். கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் புதுமையான சமையல்கள் செய்து யுமினிடி பெற்று எவிக்ஷனில் இருந்து தப்பி விட்டார் கிரேஸ் கருணாஸ். இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறி போவார்கள் என்பது பலருடைய ஆர்வமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

போட்டியாளர்களின் எதிர்பார்ப்பு
தற்போது மூன்றாவது சீசனிலும் பல கோமாளிகள் ஆரம்பத்தில் இருந்தவர்கள் ஆகவும், பலருக்கும் பரிச்சயமானவர்களாக இருந்தாலும் ஒவ்வொரு சீசனிலும் குக்குகள் புதுமுகமாக அறிமுகமாகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே தங்களுக்கு புகழ் கிடைக்கும், ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பலரும் புரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் போட்டி போட்டு அறிமுகமாகி வருகின்றனர். ஆனால் ஒரு சில போட்டியாளர்கள் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.

முதல் வெளியேற்றம்
இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் குறைந்த மதிப்பெண்களை வாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக ராகுல் தாத்தா வெளியேறியுள்ளார். ராகுல் தாத்தா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் அங்கிருந்த போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தன்னுடன் இருக்கும் சக கோமாளிகளை அதட்டி தனக்கே உரிய பாணியில் அவர்களுக்கு சளைத்தவரல்ல என்று தன்னுடைய திறமையை நிரூபித்து கொண்டிருந்தார். தற்போது ஆரம்பத்திலேயே இவர் வெளியேறி இருப்பதால் பலரும் இவரை மிஸ் பண்ணி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications