குக் வித் கோமாளியில் அறிமுகமாகும் சார்பட்டா பரம்பரை நடிகர்... அப்போ மிரட்டலாக இருக்குமா??
சென்னை: வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாக இருக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
குத்துச்சண்டை வீரராக பார்த்த நடிகர் குக்காக கலக்குவாரா??என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சார்பட்டா பரம்பரையின் ராமர்
வட சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை பின்னணி சம்பவங்களின் தொகுப்பாக சார்பட்டா பரம்பரை படம் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்து இருந்தது. இதில் நடித்திருந்த நடிகர்கள் வேற லெவலில பேசப்பட்டனர். இந்தப்படத்தில் ஒரு சில சீன்கள் அதிக அளவில் மீம்ஸ்களாக வைரலாக பரவி வந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தோன்றிய கபிலன், சிங்கம்புலி, மாரியம்மா, லட்சுமி, கெவின் டாடி, ராமன் உட்பட பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதில் ராமன் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்து இருந்தார்.

சின்னத்திரையில் அறிமுகம்
சந்தோஷ் முதல் திரைப்படத்தில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதற்குப் பிறகும் இவர் பிசாசு 2 என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். பிஸியாக இருக்கும் இவர் தனக்கு மேலும் ரசிகர்களை அதிகரிப்பதற்காக தற்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்ற செய்திகள் அவருடைய ரசிகர்களுக்கு குழப்பமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் தான் இருந்து வருகிறது.

ரியாலிட்டி ஷோவில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலருடைய வாழ்க்கை வெற்றியடைந்ததை தொடர்ந்து பல நடிகர் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தற்போது போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால். அதை பயன்படுத்த முடியவில்லையாம். அதனால் மீண்டும் இவருக்கு கிடைத்த ரியாலிட்டி ஷோ வாழ்க்கையை விட்டுவிடாமல் இதில் களமிறங்க வந்து இருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.
Recommended Video

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக இருந்து சமையல் நிகழ்ச்சிகளில் கருத்தாக செயல்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு உறுதுணையாக கோமாளிகளாக இருப்பவர்கள் செய்யும் அலப்பரைகள் வேர லெவலில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் புதியதாக குத்துச்சண்டை நடிகராக நடித்த இவர் மிரட்டலாக இருப்பாரா?? அல்லது ஜாலியாக கலகலக்க வைப்பாரா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications