குக் வித் கோமாளியில் யாரும் செய்யாததை முதல்முறையாக செய்த ஸ்ருதிகா... கொண்டாடும் போட்டியாளர்கள்
சென்னை: குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஸ்ருதிகா செய்த செயல் ரசிகர்களை வியப்படைய செய்திருக்கிறது.
ஸ்ருத்திகாவின் செயலைப் பார்த்து சக போட்டியாளர்கள் வாழ்த்துக்களை பொழிந்து வருகிறார்கள்.

மூன்றாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று விடும். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக ஈர்ப்பதை தொடர்ந்து தான் தற்போது மூன்றாவது சீசனில் அடியெடித்து வைத்திருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்போது இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்று என்று பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி தான் சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுவிட்டது.

குக் வித் கோமாளியில் அறிமுகம்
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 3வது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த 3வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஸ்ருத்திகா முதல்முறையாக களமிறங்கியிருக்கிறார். வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தனக்கு அங்கே சரியான வாய்ப்பு கிடைக்காததால் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி திருமண வாழ்க்கையில் தஞ்சம் புகுந்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் இவர் மீண்டும் சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இவரை விஜய் டிவியில் பார்த்த ரசிகர்கள் இவருக்கு அதிகமாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ஜாலியான கேரக்டர்
ஸ்ருதிகா ஸ்ரீ படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் அதற்குப் பிறகு நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நான்கு படங்களுமே தனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெகட்டிவான கருத்துக்களைக் கூட பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் இவர் ஜாலியாக கூறியிருக்கிறார். தன்னைப் பற்றி சக போட்டியாளர்கள் கலாய்த்தாலும் இவர் அதை கண்டுகொள்ளாமல் ஜாலியாக இருப்பதை பார்த்து பல ரசிகர்கள் இவரை மாடன் தீபா என்றுகூட கூறியிருக்கின்றனர். வெள்ளந்தியான பேச்சால் அனைவரின் மனதிலும் விரைவில் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் தற்போது செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

யாருமே இப்படி செய்யவில்லையாம்
குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் இவர் பார்ட்டி கொடுத்திருக்கிறார். அந்த பார்ட்டியில் என்ஜாய் செய்த சுனிதா அங்கு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் பலர் என்ன விசேஷம் என்று கேட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ஸ்ருத்திகா பேச்சில் மட்டுமல்ல குணத்திலும் வெகுளியாகவே இருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள், ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் இவருடைய பாச மழையில் நனைந்து வருகிறார்கள். இதுவரைக்கும் எந்த போட்டியாளர்களும் இந்த மாதிரி ஒரு பார்ட்டி கொடுத்து கொண்டாட்டத்தை கொடுத்தது இல்லையாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications