பாலாஜிக்கு ஆதரவாக..ஆபாசமாக கருத்து தெரிவித்தவற்கு நித்தியா கொடுத்த பதிலடி.. பீல் பண்ணிய ரசிகர்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் தாடி பாலாஜி பற்றி அவருடைய மனைவி கூறிய கருத்துக்கு தாடி பாலாஜியின் ரசிகர் வெளியிட்ட கருத்துக்கு நித்யா பதிலடி கொடுத்துள்ளார்.
நித்தியா சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் கருத்துக்களை பேசிய நபருக்கு கொடுத்த பதிலடிக்கு தற்போது அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வெளியான குடும்ப பிரச்சனை
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தான் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை தற்போது ஊருக்கே தெரிந்துள்ளது. நடிகர் பாலாஜி மற்றும் மனைவி நித்யா இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜி மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சனை வெளிவந்தது. கடந்த சில வருடமாக சோசியல் மீடியாவில் தாடி பாலாஜி குடும்ப பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ஒன்றாக இருந்தாலும், தற்போது நித்யா, பாலாஜியை கண்டித்து வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி இருவரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக நடந்து கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ச்சி முடியும் வாரங்களில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து போலத்தான் காட்டி வந்தனர். ஆனால் வெளியே வந்த பிறகும் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

நித்யா வெளியிட்ட வீடியோ
திருமணத்திற்கு முன்பு நித்தியா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபரிந்துள்ளார். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மருத்துவமனையில் எச். ஆர் அதிகாரியாகவும் இருந்துள்ளார். தற்போது கூட பாலாஜியை இவர் பிரிந்த பிறகும் இவர் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். நித்யா அவருடைய மகளோடு தனியாக வாழ்ந்து வரும் நேரத்தில் மீண்டும் தாடி பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் .தற்போது தாடி பாலாஜி தன்னைப் பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருவதாக நித்தியா கூறியுள்ளார். அதனால் அவரும் அவருடைய மகளும் சேர்ந்து பேசிய வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவு செய்தனர். அதில் ஆதாயம் பெறும் நோக்கத்தோடு தன்னைப் பற்றி பேசக்கூடாது என்றும் நித்தியா குறிப்பிட்டிருந்தார்.
Recommended Video

மன்னிப்பு கேட்க வைத்த வார்த்தைகள்
தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையில் தாடி பாலாஜி தன்னையும் தன் மகளையும் அசிங்கமாக பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை எப்ப வேணாலும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர், பாலாஜி பாவம்... உன் கூட வாழறதுக்கு சும்மா இருக்கலாம் என்று மெசேஜ் செய்துள்ளார். இதற்கு நிச்சயம் உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. உன்னுடைய அம்மாவோ, சகோதரியோ, மகளோ, இப்படி பேசினால் அல்லது அவர்களிடம் இப்படி யாராவது பேசினால் ஏற்று கொள்வாயா?? மற்றவர்களை திட்டுவதை விட்டு விட்டு வேறு ஏதாவது உருப்படியாக வேலையை பாரு என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அந்த நபரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications