Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டு கால்களும் உடைந்தாலும் டைட்டில் ஜெயித்த "கயல்”நடிகர்.. நிஜ வாழ்க்கையிலும் இத்தனை சோகங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இரண்டு கால்களும் உடைந்த நிலையிலும் டான்ஸ் ஆடி டைட்டில் ஜெயித்திருக்கிறார் சீரியல் நடிகர் அவினாஷ்.

அவினாஷ் தன்னுடைய டான்ஸ்காக கால்கள் மட்டுமல்லாமல் உடல் முழுக்கையே வருத்திக் கொண்டு ஆடக்கூடியவராக இருந்தாலும் இவர் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலிலும் அன்பு கேரக்டரில் நடித்து வருகிறார்.

போராடி கிடைத்த வெற்றி

போராடி கிடைத்த வெற்றி

ஜீ தமிழ் சேனலில் நேற்று ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய இரண்டு கால்கள் உடைந்து இருந்தாலும் என்னுடைய பெஸ்ட் நான் கொடுப்பேன் என்று டான்ஸ் ஆடி கடைசியில் டைட்டில் ஜெயித்த அவினாஷ் இந்த இடத்திற்கு வருவதற்காக பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் தன்னுடைய மருத்துவர் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் அறிவுரை கூறியும் தான் இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்று கலந்து கொண்டதாக கூறி வீல்சேரில் அமர்ந்து டான்ஸ் ஆடி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்து டைட்டில் பட்டத்தையும் வெற்றி பெற்றிருக்கிறார்.

போராடி கிடைத்த வெற்றி

போராடி கிடைத்த வெற்றி

ஜீ தமிழ் சேனலில் நேற்று ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய இரண்டு கால்கள் உடைந்து இருந்தாலும் என்னுடைய பெஸ்ட் நான் கொடுப்பேன் என்று டான்ஸ் ஆடி கடைசியில் டைட்டில் ஜெயித்த அவினாஷ் இந்த இடத்திற்கு வருவதற்காக பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் தன்னுடைய மருத்துவர் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் அறிவுரை கூறியும் தான் இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்று கலந்து கொண்டதாக கூறி வீல்சேரில் அமர்ந்து டான்ஸ் ஆடி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்து டைட்டில் பட்டத்தையும் வெற்றி பெற்றிருக்கிறார்.

சிறுவயதிலே உடன்படிக்கை

சிறுவயதிலே உடன்படிக்கை

அவினாஷ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அன்பு கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஸ்போர்ட்ஸ் பிளேயர் ஆகவும் இருந்து வருகிறாராம். நேஷனல் லெவலில் அத்தலடீஸில் பல பதக்கங்களை வாங்கி இருக்கிறாராம் ஆனாலும் டான்ஸ் மீது தனக்கு இருந்த காதலால் தன்னுடைய வீட்டில் சிறு வயதிலேயே சொல்லிவிட்டாராம். படிப்பு முடிந்ததும் தான் தன்னுடைய கேரியரை நோக்கி செல்ல இருப்பதாக, வீட்டில் இருப்பவர்களும் நீ நல்லபடியாக படித்து முடி அதற்கு பிறகு பார்க்கலாம் என்று கூறி இருந்தார்களாம். இவர் கேரளாவை சேர்ந்தவராம். ஆனாலும் நான்கு வயதிலேயே சென்னைக்கு குடும்பத்தோடு வந்து விட்டார்களாம்.

நான்காம் வகுப்பிலே கிடைத்த வாய்ப்பு

நான்காம் வகுப்பிலே கிடைத்த வாய்ப்பு

நான்காம் வகுப்பு படிக்கும் போது சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருந்தாராம். அதற்குப் பிறகு வீட்டில் படிப்பு தான் முக்கியம் என்று சொன்ன பிறகு 12-ம் வகுப்பு வரை படிப்பை முடித்துவிட்டு அதற்கு பிறகு தான் தன்னுடைய டான்ஸ் மீண்டும் தொடங்கியிருக்கிறார். இவர் சின்னத்திரை நடிகையாக இருக்கும் அக்ஷயா வின் அண்ணன் தானாம். அக்ஷயா காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் பல சீரியல்களில் அக்ஷயா வில்லியாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். அதுபோல டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக அக்ஷயா கலந்து கொண்டிருந்தார்.

அழகு சீரியலில் திருனா

அழகு சீரியலில் திருனா

பல வருடங்களுக்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் திருனா என்கிற கேரக்டரில் இவர் நடிக்க வந்திருக்கிறார். இந்த சீரியலின் மூலமாக நடிப்பை கற்றுக்கொண்டு இவர் அம்மன் சீரியல் மட்டுமில்லாமல் பல மலையாள சீரியல்களும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கால் ஒடிந்தாலும் பரவாயில்லை இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஆடியே தீர வேண்டும் என்று விடாமல் முயற்சயோடு ஆடிய அவினாஸ்க்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அவரை பற்றிய பல சுவாரசியமான தகவல்களும் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அவினாஸ்க்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்தது அவருடைய காதல் மனைவிதானாம்.

காதலும் போராட்டமும்

காதலும் போராட்டமும்

கயல் சீரியலில் அன்பு கேரக்டரில் நடித்து வருபவரை பார்ப்பதற்கு சிங்கிள்ஸ் என்று நினைத்து வந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும். இவருக்கு காதல் திருமணம் முடிந்து இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இவருடைய மனைவியை மீட் பண்ணி இருக்கிறார். ஆனால் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது. பின்பு இவர்களுடைய காதல் வீட்டில் தெரிந்ததும், அவினாஷ் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். ஆனால் அவருடைய மனைவியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காமல் அவருடைய மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்களாம். ஆனாலும் அவினாஷ் அங்கே சென்று பல போராட்டங்கள் செய்து தான் அவருடைய மனைவியின் பெற்றோரிடத்தில் சம்மதத்தை வாங்கி திருமணத்தை செய்திருந்தாராம். தற்போது மனைவியோடு பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய விடாமுயற்சிக்கு இப்போது கிடைத்திருக்கும் வெற்றிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+