
கடல் அலையோடு கபடி ஆடும் தர்ஷா குப்தா.. அலைமோதுகிறது ரசிகர்களின் மனது
சென்னை: மாடர்ன் உடையில் தர்ஷா கடல் கரையோரத்தில் விளையாடிய விளையாட்டு வைரலாக பரவி வருகிறது.
கருப்பான டைட் உடையில் இவர் நடக்கும் அழகை பார்த்து அந்த அலைகளும் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டதாம்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! அன்று வேலுமணியுடன்! இன்று உதயநிதியுடன்! கோவையும் சர்ச்சையும்!

சின்னத்திரை மிரட்டல் வில்லி
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் காலூன்றியிருக்கும் தர்ஷா குப்தா சமூகவலைத்தளத்தில் விட்டுவைக்காமல் எப்போதுமே ரசிகர்களை பாடாய்படுத்தி எடுத்து வருகிறார். இவர் சமூக வலைத்தளம் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருந்தாலும் இவருக்கு சீரியல்களில் அதிகமாக கிடைத்திருந்தது வில்லி ரோல் தான். முதல் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்பு நடித்த சீரியல்களில் எல்லாம் வில்ல தனத்தை காட்டும் மிரட்டல் வில்லியாக விரட்டிக்கொண்டு இருந்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
தர்ஷா குப்தா என்னதான் சீரியலில் வில்லத்தனத்தை பண்ணிக் கொண்டிருந்தாலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர். தற்போது சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பலருக்கும் சமூகவலைதளத்தில் பரிச்சயமான முகமாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவை பாலோ பண்ணும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.

எல்லா பக்கமும் மிரட்டல்
பாவாடை தாவணியில் தொடங்கி மாடல் உடையிலும் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்லுமளவிற்கு தன்னுடைய க்யூட்டான சிரிப்பை காட்டி எப்போதும் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் இவருடைய போட்டோ ஷூட் போட்டோக்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவரும். லாக்டோன் நேரத்தில் நடிகைகள் பலர் சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் இவர் மொட்டை மாடியில் ஷூட்டிங் ஆரம்பித்து ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கடற்கரையில் கலக்கல்
தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தாலும் அடுத்த திரைப்படம் கமிட்டாகி விட்டாரா என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவருடைய நடிப்பு மற்றும் குழந்தை போல ரசிகர்களிடம் பழகுவதை பார்த்த ரசிகர்கள் இவரை தலைவி என்று அழைத்து வருகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடற்கரையோரத்தில் இவர் கருப்பு உடையில் ஸ்டைலாக நடந்தபடி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். இவர் நடக்கும் நடையைப் பார்த்து அந்த கடல் அலைகளும் இவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. தன்னை நோக்கி வரும் கடல் அலையோடு இவரும் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்.