விஜய் மனைவி சங்கீதா போட்டோ ஒன்று பார்த்தேன்.. அதிர்ச்சி ஆகிட்டேன்! ரொம்ப மோசம்! இயக்குநர் அமீர் ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளால் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். அரசியல், குடும்பம், ரசிகர்கள் நடத்தை என பல்வேறு விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருவதால் அவர் குறித்து சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

விவாகரத்து விவகாரம் பேசப்பட்ட பின்னணி
சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும், அந்த தொடர்பை முறித்துக் கொள்ளுமாறு பலமுறை கேட்டும் அவர் அதை செய்யவில்லை என்றும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் அந்த நடிகையுடன் எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டதாக சில தகவல்கள் பரவின. இந்த செய்தி வெளிவந்ததும் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் இருவிதமான நிலை
இந்த விவகாரம் வெளியான பிறகு விஜய் ரசிகர்களிடையே கூட இருவிதமான கருத்துகள் உருவானது. ஒரு பகுதி ரசிகர்கள் "இது அவருடைய தனிப்பட்ட குடும்ப விஷயம்" என்று கூறி தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இன்னொரு பகுதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய்யின் மனைவியை குறிவைத்து கடுமையான விமர்சனங்களையும் ஆபாசமான கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். இதுவும் பெரிய சர்ச்சையாக மாறியது.
இயக்குனர் அமீரின் கடும் விமர்சனம்
இந்த நிலையில் இயக்குனர் அமீர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசும்போது, "சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் ஒரு புகைப்படத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்து 'இவள் தான் ஐட்டம்' என்று கேப்ஷன் எழுதியிருந்தார். அதை பார்த்தபோது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
எப்படி மக்கள் இவ்வளவு கீழே இறங்கி பேசுகிறார்கள் என்று நினைத்தேன். நான் பார்த்த அந்த பதிவு விஜய் கண்ணில் பட்டதா இல்லையா தெரியாது. ஆனால் இப்படி நடக்கும் போது அவர் ஒரு குரல் கொடுக்க வேண்டாமா?" ஏனென்றால் இதே பதிவை விஜயின் மகளும் மகனும் பார்க்கும்போது நம்முடைய அம்மாவை இப்படி எல்லாம் விமர்சிக்கிறார்களே என்று எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
குடும்ப பிரச்சனையை முறைப்படி தீர்க்கலாம்
அமீர் தொடர்ந்து பேசும்போது, "ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சனைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். இருவரும் பிரிந்து போக வேண்டும் என்று நினைத்தால் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரியலாம். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.
ஆனால் ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் இப்படி இழிவாக பேசுவது சரியானது இல்லை. குறிப்பாக விஜய் முன்பு 'என்னுடைய குடும்ப விஷயம் ஒர்த்தே இல்லை' என்று கூறியதுதான் சில ரசிகர்களுக்கு மேலும் துணிச்சலை கொடுத்தது போல இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..














Click it and Unblock the Notifications