ஷபானா மற்றும் ஆரியன் இடையே கருத்து வேறுபாடு... குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: திருமணம் முடிந்த ஒரு சில வாரங்களில் ஷபானாவை பற்றிய செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஷபானா திருமண வாழ்க்கையை ஆரியன் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா??என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஷபானாவின் அவசர திருமணத்திற்கு அவருடைய நெருங்கிய தோழிதான் காரணமாம்.

செம்பருத்தி பார்வதி
செம்பருத்தி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ஷபானாவை பலருக்கும் தெரியும். ஷபானா எனும் பெயரை விடவும் பார்வதி என்னும் பெயரால் சின்னத்திரையில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷபானா, தற்போது பெண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆண் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினியாக இருந்து வருகிறார். இவருடைய க்யூட்டான போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வைரல் ஆகி வரும். அதுமட்டுமல்லாமல் ஷபானாவின் சேட்டைகளும் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

வெளியான காதல் ரகசியம்
ஷபானா ஜீ தமிழில் பிரபலமானதைப்போலவே விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்திருப்பவர் ஆரியன். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தியை ரசிகர்கள் தெரிந்து கொண்டதும் இந்த அதிர்ச்சி அடைந்திருந்தனர்.முதலில் நம்பாத ரசிகர்கள் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் போட்டோக்களை பார்த்த பிறகுதான் பலர் நம்பியுள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்த விஷயம் சமூக வலைத்தளத்தில் பரவியதும் இவர்கள் திருமணம் செய்வதற்கு எப்படியும் ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீர் திருமணம்
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இவர்கள் திருமணம் செய்யாமல் திடீரென்று கொட்டும் மழையில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தன்று தான் ஷபானா தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னுடைய திருமண செய்தியை தெரிவித்து இருந்தார். இந்த செய்தியை கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்திருந்தாலும் மனதை தேற்றிக்கொண்டு வாழ்த்துக்களை கூறிவந்தனர். இவர்களுடைய திருமணத்திற்கு காரணம் ரேஷ்மா தான் என்று ஷபானாவின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஷபானாவின் திருமணத்திற்கு ஷபானாவின் வீட்டில் சம்மதம் இல்லை என்ற செய்திகள் பரவலாக பரவி வந்தது. ஆரியனின் குடும்பத்தினர் சம்மதத்தோடுதான் ஷபானா இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் பரவி வந்தது.

திடீர் பிரச்சனை
திருமணம் முடிந்து ஒரு மாதங்கள் முடிவடைந்த நிலையில் ஷபானா மற்றும் ஆரியனின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது என்று செய்திகள் பரவி வருகிறது. ஆரியனின் வீட்டில் ஷபானாவை ஏற்றுக் கொள்ளாததால், ஷபானா திருமணம் முடிந்து ஒரு மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் ஆரியனின் வீட்டிற்கு செல்லவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் தேன் நிலவிற்கு பாண்டிச்சேரி அருகில் சென்று இருக்கின்றனர். ஆனால் இவர்கள் நான்கு நாட்கள் பிளான் செய்து தேனிலவுக்கு சென்ற நிலையில் ஒரு நாளில் இருவரும் தனித்தனியாக வீட்டிற்கு வந்து விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

குழப்பத்தில் ரசிகர்கள்
ஏற்கனவே ஷபானாவின் வீட்டிலிருந்து திருமணத்திற்கு அவருடைய அம்மா மட்டும்தான் கலந்துகொண்டிருந்தார். ஆனால் ஆரியனின் வீட்டில் அவருடைய தாய் தான் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து இருந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்று ஷபானாவின் ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். இந்த நிலையில் ஷபானா ஒரு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மனது பாதிக்கப்பட்டிருப்பது போல போஸ்ட் போட்டுள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் ஏற்கனவே காதலிக்கும் விஷயத்தையும் இப்படித்தான் இலைமறைகாயாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ஷபானாவின் வருத்தத்தை பார்க்கும்போது செய்திகள் உண்மையாகத்தன் இருக்குமோ குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications