For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிமேகலை, பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு இத்தனை கோடி சொத்துகளா? வாயை பிளக்கும் ரசிகர்கள்!நம்ப முடியலையே

Google Oneindia Tamil News

சென்னை: தொகுப்பாளினிகள் மணிமேகலை மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோருக்கு இருக்கும் சொத்து மதிப்பு தெரியுமா?

கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் நிறைய பேர் சமையல் குறிப்பு, அழகு குறிப்புகள், மருத்துவ குறிப்பு அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை குறித்து யூடியூப் சேனல் நடத்தி வருமானம் ஈட்டி வந்தனர்.

ஆனால் கொரோனா லாக்டவுன் வந்தாலும் வந்தது. நிறைய பேர் யூடியூப் சேனல் தொடங்கி காசு பார்த்து வருகிறார்கள். ஒரு சாம்பார் சாதம் எப்படி வைப்பது என போட்டால் ஏராளமான வீடியோக்கள் வருகின்றன.

அருவியில் நனையும் ரோஜா.. தனிமையில் பயணம்.. பிரியங்கா நல்கரி எங்கே போனார் தெரியுமா? அருவியில் நனையும் ரோஜா.. தனிமையில் பயணம்.. பிரியங்கா நல்கரி எங்கே போனார் தெரியுமா?

குழப்பம்

குழப்பம்

இவற்றில் எதை பார்த்து சமைப்பது என்ற குழப்பமே எழுகிறது. அந்த வகையில் திரைப்பிரபலங்கள், சீரியல் நடிகர், நடிகைகள், டிவி தொகுப்பாளினிகள் யூடியூப் சேனல்களை தொடங்கியுள்ளனர். இவர்கள் பணியாற்றுவதை காட்டிலும் யூடியூப்பில் நிறைய வருமானத்தை பெறுவதாக சொல்லப்படுகிறது.

மணிமேகலை

மணிமேகலை

அந்த வகையில் 2010-ஆம் ஆண்டு சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கியவர் மணிமேகலை. இவர் நிறைய ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு நடன இயக்குநர் ஹுசைன் என்பவரை காதலித்து கடும் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் கால் வைத்த நேரம் இவருக்கு நிறைய நிகழ்ச்சிகள் கைவசம் கிடைத்தன. கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி ஆகியன. இவற்றில் குக் வித் கோமாளியில் கோமாளியாக மணிமேகலை கலந்து கொள்கிறார். இது ஒரு சமையல் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை செய்யும் காமெடி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து வருகிறது.

மணிமேகலையின் சொத்து மதிப்பு

மணிமேகலையின் சொத்து மதிப்பு

இவர் விஜய் டிவி தொகுப்பாளினி மட்டும் இல்லாமல் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார். அந்த வகையில் யூடியூப் சேனல், குக் வித் கோமாளி உள்ளிட்டவை மூலம் கிடைத்த வருமானத்தில் மணிமேகலையின் சொத்து மதிப்பு 1 மில்லியன் டாலர் முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 7.82 கோடி முதல் 35 கோடி வரையாகும்.

 பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

அது போல் விஜய் டிவியின் தொகுப்பாளினிகளில் தற்போது மக்கள் மனதை கவர்ந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தனது தனித்துவமான சிரிப்பால் நிறைய ரசிகர்களை கொண்டிருக்கிறார். இவரும் மாகாபா ஆனந்தும் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செய்யும் காமெடிகள் அட்டகாசமாக இருக்கும். இவரும் யூடியூப் சேனலை வைத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.16 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 9 கோடியாகும். மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சொத்து மதிப்புகள் உண்மையிலேயே இத்தனை கோடிகளா இல்லை வதந்தியா என தெரியவில்லை.

English summary
Do you know the assets worth of Manimegalai and Priyanka Despande? Here are the list!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X