மாமியாரின் காலில் விழுந்த எதிர்நீச்சல் ஜனனி...என்னம்மா நடிக்கிறாங்கப்பா.. நம்ப முடியலையே..!!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் மதுமிதா வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் வியப்பை கொடுத்து இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய மாமியாராக நடிக்கும் சத்யபிரியாவும், ஜனனியும் சேர்ந்தடித்த லூட்டியை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்து தான் போயிருக்கிறார்கள்.

எதிர் நீச்சலுக்கு வர காரணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா முதல் முறையாக தமிழ் சீரியலில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முதல் முறையாக திருச்செல்வன் ப்ரொடக்ஷனில் இருந்து இவருக்கு போன் வந்ததும் முதலில் இதில் நடிக்கவா வேண்டாமான்னு என்று குழப்பத்தில் தான் இருந்தாராம். ஆனால் அதற்குப் பிறகு திருச்செல்வன் ப்ரொடக்ஷனை குறித்த நெட்டில் சர்ச் செய்து பார்த்த பிறகு தான் உடனே இந்த சீரியலுக்கு ஓகே சொல்லி இருந்தாராம்.

அடிமைத்தனத்துக்கு எதிரானவள்
எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்து வருவதாகவும்,குடும்ப கவுரவம் ஆண் அடிமைத்தனம் என்கிற போர்வையில் இருந்து ஒரு பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடும் போராட்டமாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது .இந்த சீரியலில் ஜனனி தன்னுடைய சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக குணசேகரன் வீட்டில் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சீரியலில் சக்தியோடு ஏற்பட்ட தகராறால் வீட்டை விட்டு ஜனனி வெளியேறி விட்டார்.

காலில் விழுந்த ஜனனி
ஜனனி வீட்டை விட்டு வெளியே சென்றதும் எங்கே சென்றார் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஜனனி எங்கே சென்றார் என்று தேடி வரும் நிலையில் தற்போது ஜனனியாக நடிக்கும் மதுமிதா ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செய்யும் அலப்பறைகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் மாமியார் அந்த வீட்டு பெண்களை கொடுமைப்படுத்தும் வில்லியாக இருந்து வருகிறார். அவரிடம் எப்போதுமே மல்லு கட்டிக் கொண்டிருக்கும் ஜனனி தற்போது இந்த வீடியோவில் மாமியாராக இருக்கும் சத்யபிரியாவிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறேன் என்று கூறுகிறார்.

என்னம்மா நடிக்கிறாங்க
காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறேன். எனக்கு ஒரு அம்பது ரூபாய் தாங்கள் என்று குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ஜனனி செய்யும் அலப்பறைகளை பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் .அதுவும் கடற்கரையில் இவர்கள் இந்த வீடியோ எடுத்திருப்பதால் சீரியலில் ஜனனி கடற்கரையில் உட்கார்ந்தபடி ஏதேனும் எபிசோடுகள் வருமா ? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். என்னதான் சீரியலில் மாமியார் மருமகள் முறைத்து முட்டி கொண்டு இருந்தாலும், சீரியல் முடிவடைந்த பிறகு இவர்களுக்கு இப்படி ஒரு ஜாலியான பிணைப்பு இருக்கிறதா? என்று பார்ப்பவர்கள் எல்லாம் வியந்து போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications