எதிர்நீச்சல்: குணசேகரன் கம்பெனிக்குள் வந்து கதிரை அடித்த பர்ஹானா.. ஜனனி கேட்ட கேள்வி?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் சொத்து ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருப்பது சக்தி மற்றும் குணசேகரனுக்கு தெரிய வருகிறது.
ஜீவானந்தம் குணசேகரனின் ஆள் தான் என்று ஈஸ்வரியால் ஜனனியும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத பல டுவிஸ்ட்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்தது. அதை தொடர்ந்து வீட்டில் இருக்கும் குழந்தைகளும் குணசேகரனை எதிர்த்து பேச தொடங்கி இருக்கின்றனர். இதுவரைக்கும் அமைதியாக இருந்த மருமகள்களும் எங்களுக்கு உரிமை வேண்டும் அதே நேரத்தில் மரியாதை வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் குணசேகரன் இதற்கெல்லாம் நான்கு நாட்கள் அமைதியாகவே இருந்து வந்தார். காரணம் பட்டமாளின் சொத்து முழுக்க தன்னுடைய பெயருக்கு மாற வேண்டும் என்று அதற்காக காத்திருந்தார். அதுபோல வீட்டில் மருமகள்களின் பெயரில் இருந்த தன்னுடைய கம்பெனிகளையும் தன் பெயருக்கு கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.
ஆனால் ஜனனியும் சக்தியும் மட்டும் அதில் கையெழுத்து போடவில்லை. இதில் கோபமாக இருந்தாலும் நான்கு நாட்களுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தான் குணசேகரன் இருந்து வந்தார். ஆனால் குணசேகரனுக்கு மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் வந்து மொத்த சொத்தும் ஜீவானந்தம் என்ற பெயருக்கு மாறிவிட்டது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஜீவானந்தம் யார் என்று தெரியாத குணசேகரனும் அவருடைய தம்பிகளும் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடியாமல் இருக்கும் நிலையில் ஜீவனந்தத்தின் ஆள்கள் வந்து கம்பெனியில் இருப்பவர்களை வெளியே துரத்திவிட்டு அராஜகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆடிட்டர் சொல்லியதால் அனைவரும் கம்பெனிக்கு வருகின்றனர்.
ஆனால் ஜீவானந்தம் குணசேகரனின் ஆளாகத்தான் இருக்க முடியும் என்று ஈஸ்வரி சொன்னதை கேட்டு ஜனனியும் அப்படியே நம்பிக் கொண்டிருக்க இன்று வெளியான பிரமோவில் கம்பெனிக்கு வந்த குணசேகரன் கதிரிடம் பர்ஹானா சார் இங்க கத்தி பேசக்கூடாது. மரியாதையா பேசுங்க என்று கையை நீட்டி பேச உனக்கெல்லாம் என்னடி மரியாதை என்று கதிர் பர்ஹானாவை அடிக்க போக பர்ஹானா கதிருடைய கையை பிடித்து முறுக்கி அடிக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஜனனி பர்ஹானாவிடம் நீங்கதான அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்து அப்பத்தா கைரேகை எடுத்தது. உன் கூட வந்த ஆளை எங்க? என்று கேள்வி கேட்க பர்ஹானா பதில் சொல்லாமல் முறைத்தபடி இருக்கிறார். இதை கேட்டு குணசேகரன் மேலும் அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் பெரும் பிரச்சனை நடக்கப் போகிறது என்பதால் எபிசோடு ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications